ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 3, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

·   மருத்துவக் கல்வி சேர்க்கையின் அனைத்து நிலைகளிலும், நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

· பொதுச் சொத்துக்களை தனியார்மயமாக்கும் மோடி அரசின் செயல், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களின் வேலை வாய்ப்பை பாதிக்கும் என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அஸ்வினி குமார் கூறியுள்ளார்.

எக்னாமிக் டைம்ஸ்:

· பொது சொத்துக்களை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு, தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது, பிரதமருக்கு கடிதம் எழுத இருப்பதாக முதலமைச்சர் மு..ஸ்டாலின் தெரிவித்தார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

· உயர்த்தப்பட்ட எரிபொருள் விலையில் இருந்து கிடைத்த ரூ. 25 லட்சம் கோடி எங்கே? என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி. ஒன்றிய அரசு இந்த பணத்தை எந்த நலத்திட்டங்களுக்கும் பயன்படுத்தவில்லை என குற்றச்சாட்டு..

- குடந்தை கருணா

No comments:

Post a Comment