95ஆம் ஆண்டு காணும் முதுபெரும் திராவிடர் இயக்கச் செம்மல் அருளாளர் ஆர்.எம். வீரப்பன் பிறந்த நாள் தமிழர் தலைவர் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 9, 2021

95ஆம் ஆண்டு காணும் முதுபெரும் திராவிடர் இயக்கச் செம்மல் அருளாளர் ஆர்.எம். வீரப்பன் பிறந்த நாள் தமிழர் தலைவர் வாழ்த்து

திராவிடர் கழகத்தில் - காரைக்குடி செட்டிநாடு பகுதியில் சிறந்த பெரியார் தொண்டர்களாக காரைக்குடி இராம. சுப்பையா, என்.ஆர். சாமி, ஆர்.எம். வீரப்பன் போன்றவர்கள் கடுமையாக உழைத்தனர். தந்தை பெரியார் அவர்கள் ஆர்.எம். வீரப்பன் அவர்களை ஈரோட்டிற்கே அழைத்துச் சென்று அவரை தனது நம்பிக்கைக்குரிய பணித் தோழர்களில் ஒருவராக்கி மகிழ்ந்த வரலாறு - ஆரம்பக் கால பொது வாழ்வின் வரலாறு.

பிறகு அறிஞர் அண்ணா, தி.மு.., எம்.ஜி.ஆர். தொடர்பு, .தி.மு.. என்று பல நிலைகளிலும் தொண்டாற்றி, இன்று அருளாளர் ஆர்.எம்.வீ. என்று அனைவராலும் போற்றப்படும் அவரது 95ஆம் ஆண்டு பிறந்த நாளில் திராவிடர் கழகத்தின் சார்பில் நமது  வாழ்த்தினைத் தெரிவித்துப் பெரிதும் மகிழ்கிறோம்.

பல்லாண்டு நல்ல உடல்நலத்துடன் வாழ வேண்டுமென வாழ்த்தி மகிழ்கிறோம்.

 கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம் 

சென்னை       

9-9-2021              

No comments:

Post a Comment