கோயிலுக்குள் நுழைந்த தாழ்த்தப்பட்ட வகுப்பு இளைஞருக்கு அபராதம் விதித்த விவகாரம்:அர்ச்சகர் உள்பட 8 பேர் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 30, 2021

கோயிலுக்குள் நுழைந்த தாழ்த்தப்பட்ட வகுப்பு இளைஞருக்கு அபராதம் விதித்த விவகாரம்:அர்ச்சகர் உள்பட 8 பேர் கைது

பெங்களூரு,செப்.30 கருநாடக மாநிலம் குல்பர்கா மாவட் டத்தில் உள்ள ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் கங்காதர் (24). தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவர் கடந்த 14 ஆம் தேதி கரடகி கிராமத்தில் உள்ள மஹா லட்சுமி கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்தார்.

பூஜை முடிந்து அவர் வெளியே வந்ததைப் பார்த்த கோயில் அர்ச்சகர் பசவராஜ், பதிகர் கரடகி கிராமத்தை சேர்ந்த ஊர் பெரியவர்கள் ரேவண்ணா சுவாமி, சேக ரப்பா, சரணப்பா, பிரஷாந்த், பசவராஜ், கடப்பா நாயக் ஆகியோரை அழைத்து ஊர் பஞ்சாயத்தை கூட்டியுள்ளார்.

அந்த பஞ்சாயத்தில் கூறி யபடி கங்காதர் கடந்த 20ஆம் தேதி கோயிலுக்கு பூஜை செய்வதற்காக ரூ.11,000 அபராதமாக வழங்கியுள்ளார். அத்துடன் இல்லாமல் பஞ்சாயத்தார், இன்னும் ஒரு மாதத்தில் ரூ.5 லட்சம் அப ராதத்தை தருவ தாக எழுதி வாங்கியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தாழ்த்தப்பட்ட சங் கர்ஷ சமிதி அமைப்பினர் குல்பர்கா மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண் காணிப்பாளர் டி.சிறீதராவி டம் புகார் அளித்தனர்.

இதையடுத்து காவல் துறையினர் விசாரித்து, அர்ச் சகர் பசவராஜ் பதிகர், ரேவண்ணா சுவாமி, சேக ரப்பா, சரணப்பா, பசவராஜ், கடப்பா நாயக் உள்ளிட்ட 8 பேர்மீது தாழ்த்தப்பட்ட, பழங் குடியினர், வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 504, 149 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக் குப்பதிவு செய்தனர். இதை யடுத்து 8 பேரும் நேற்றுமுன் தினம் (28.9.2021) கைது செய் யப்பட்டனர்.

கடந்த வாரத்தில் கொப் பல் அருகே கோயிலுக்குள் நுழைந்த 4 வயது தாழ்த்தப் பட்ட குழந்தைக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்ட விவகாரத்திலும் அர்ச்சகர் உள்ளிட்டவர்கள்மீது தாழ்த் தப்பட்டவர்கள், பழங்குடி யினர்  வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment