8 விழுக்காடு கிராமப்புறக் குழந்தைகள் மட்டுமே இணைய வகுப்புகளைக் கவனிக்கிறார்கள்: ஆய்வில் அதிர்ச்சித்தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 11, 2021

8 விழுக்காடு கிராமப்புறக் குழந்தைகள் மட்டுமே இணைய வகுப்புகளைக் கவனிக்கிறார்கள்: ஆய்வில் அதிர்ச்சித்தகவல்

நகர்ப்புறங்களில் 24 விழுக்காடு மற்றும் கிராமப்புறங்களில் 8 விழுக்காடு பேர் மட்டுமே இணையத்தில் தினந்தோறும் தவறாமல் படித்து வருகிறார்கள்

கரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டதால் பல மாதங்களாக இணைய மூலம் வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஆனால்  இணைய கல்வி கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு மோசமான விளை வுகளை ஏற்படுத்தியுள்ளதாக ஒரு புதிய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்தி யாவில் இணைய கல்வி குறித்து எடுக்கப் பட்ட ஆய்வு முடிவு அதிர்ச்சி அளிக்கக் கூடிய வகையில் உள்ளது. மேலும், தொற்று நோயால் ஏற்பட்ட நிதி நெருக்கடி தனியார் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் வெளி யேற வழிவகுத்துள்ளது.

தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட வர்களில் நான்கில் ஒரு பகுதியினர் 17 மாத ஊரடங்கின் போது அரசு பள்ளிக்கு மாற்றப் பட்டனர். குடும்ப வருவாய் குறைவு, இணைய கல்வி மீது குழந்தைகளுக்கு ஈடு பாடு இல்லாதது போன்ற காரணங்களால் அரசு பள்ளிக்கு மாற்றப்பட்டனர். பொருளா தார நிபுணர்கள் ஜீன் ட்ரேஸ், ரீதிகா கெரா மற்றும் ஆராய்ச்சியாளர் விபுல் பைக்ரா ஆகியோரின் மேற்பார்வையில் கணக் கெடுப்பு நடத்தப்பட்டது.

ஆகஸ்ட் மாதம் அசாம், பீகார், சண்டி கர், டில்லி, குஜராத், அரியானா, ஜார்க்கண்ட், கருநாடகா, மத்திய பிரதேசம், மகாராட்டிரா, ஒடிசா, பஞ்சாப், தமிழ்நாடு, உத்தரப்பிர தேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங் களில் கரோனா காலத்தில் பள்ளிகள் மூடப் பட்டதை அடுத்து அதன் தாக்கம் எப்படி இருக்கிறது என்பதை அறிய ஆய்வு நடத்தப்பட்டது.

நகர்புறங்கள், கிராமம், குக்கிராமங்களில் வசிக்கும் 1400 குடும்பங்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் சுமார் 60 விழுக்காடு குடும்பங்கள் கிராமப்புறங்களில் வசிக்கின்றன. மேலும் 60 விழுக்காடு தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவை என அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது. இணைய வகுப்பு குறிப் பிட்ட அளவே சென்றடைகிறது என்பதை கணக்கெடுப்பு கூறுகிறது. நகர்ப்புறங்களில் 24 விழுக்காடு மற்றும் கிராமப்புறங்களில் 8 சதவீதம் பேர் மட்டுமே இணையத்தில் நாள் தோறும் தவறாமல் படித்து வருகிறார்கள். திறன்பேசி இல்லாத காரணத்தால் நிறைய பேரால் படிக்க முடியவில்லை என்று ஆய்வு கண்டறிந்துள்ளது.

திறன்பேசி உள்ள வீடுகளில் கூட, இணைய கற்றல் வளங்களை அணுகும் குழந்தைகளின் விகிதம் நகர்ப்புறங்களில் வெறும் 31 விழுக்காடு மற்றும் கிராமப்புறங் களில் 15 விழுக்காடு ஆக உள்ளது. திறன் பேசிகள் இருந்தாலும் பெரும்பாலும் வீடு களில் உள்ள வேலை செய்யும் பெரியவர் களால் பயன்படுத்தப்படுகின்றன. பள்ளிக் குழந்தைகளுக்கு குறிப்பாக இளைய உடன் பிறப்புகளுக்கு திறன்பேசி கிடைக்கலாம் அல்லது கிடைக்காமல் போகலாம். கிராமப் புறங்களில் உள்ள பள்ளிகள் தங்கள் மாண வர்களுக்கு இணைய படிப்பு பொருட்களை அனுப்புவதில்லை அல்லது பெற்றோருக்கு இதுகுறித்து தெரியாமல் இருக்கலாம் என ஆய்வு கூறுகிறது.

கணக்கு எடுக்கப்பட்ட 1,400 குழந் தைகளில் அய்ந்தில் ஒரு பங்கினர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனாவால் பள் ளிகளை மூடத்தொடங்கியபோது தனியார் பள்ளிகளில் படித்து வந்தனர். இதில் நான்கில் ஒரு பங்கினர் ஆகஸ்ட் 2021 க்குள் தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டதாக கணக்கெடுப்பு கூறுகிறது. தற்போது பல பள்ளிகள் இடமாற்ற சான்றிதழை தருவ தற்கு முன்பு அனைத்து நிலுவையில் உள்ள கட்டணத்தையும் செலுத்துமாறு கூறு கின்றன. இந்த நிலைமையை சமாளிக்க பெற்றோர்கள் போராடி வருகின்றனர். இவர்களால் அரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்.

அதேபோன்று அரசு பள்ளிகளில் படிக் கும் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக மதிய உணவு வழங்கப்பட்டு வந்தது. தற் போது கரோனாவால் பள்ளிகள் மூடப்பட்ட தால் அதனை மாற்றி உணவு தானியங் களாகவோ பணமாகவோ வழங்குமாறு ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டது. ஆனால் இந்த விநியோகம் முறையாக நடைபெறவில்லை என்பதை ஆய்வு காட்டுகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் 20 சதவீத நகர்ப்புற மாணவர்கள் மற்றும் 14 விழுக்காடு கிராமப்புற மாணவர் கள் தானியங்கள் மற்றும் பணம் போன்ற வற்றை பெறவில்லை.

மாணவர்களின் கற்றல் திறன் பற்றிய ஆய்வு அதிர்ச்சியளிக்க கூடியதாக உள் ளது. 5 ஆம் வகுப்பில் படிக்கும் பாதியளவு மாணவர்களால் மட்டுமே 2ஆம் வகுப்புக் கான பாடங்களை படிக்க முடிகிறது. பெரும் பாலான பெற்றோர்கள் ஊரடங்கால் தங்கள் குழந்தைகளின் வாசிப்பு மற்றும் எழுதும் திறன் குறைந்துவிட்டதாக உணர்கிறார்கள். கற்றல் இடைவெளி, வாசிப்பு மற்றும் எழுதும் திறனில் ஏற்பட்டுள்ள சரிவு பேரழி விற்கான ஆரம்பம் என்று அறிக்கை கூறு கிறது.

உதாரணமாக, ஊரடங்கிற்கு முன்பு கிரேடு 3இல் ஒரு குழந்தை சேர்க்கப்படுகிறது. ஆனால் அதன் கற்றல் திறன் கிரேடு 2 அய் தாண்டி பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெற வில்லை. ஊரடங்கில் தற்போது கிரேடு 1 என்ற அளவிற்கு திறன் உள்ளது. ஆனால் தற்போது கிரேடு 5இல் சேர்க்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் அடுத்தடுத்த வகுப்புகளில் படிக்கும். இதனை சரி செய் வதற்கு பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் ஆகியவற்றில் பெரிய மாற்றங்கள் தேவைப் படுகிறது.

No comments:

Post a Comment