7,500 அடுக்குமாடி குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்யப்படும் சட்டப் பேரவையில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 2, 2021

7,500 அடுக்குமாடி குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்யப்படும் சட்டப் பேரவையில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் அறிவிப்பு

சென்னை, செப்.2 சென்னை மற்றும் பிற நகரங்களில் சிதிலம் அடைந்து காணப்படும் 7,500 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.1,200 கோடியில் மறுகட்டுமானம் செய்யப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்தார்.

சட்டப் பேரவையில் நேற்று (1.9.2021) நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பிறகு, குடிசை மாற்று வாரியம் தொடர்பாக ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:-

ரூ.1,200 கோடியில் மறு கட்டுமானம்

சென்னை மற்றும் இதர நகரங்களில், சிதிலம் அடைந்த 7500 அடுக்குமாடி குடியிருப்புகள் நடப்பு நிதியாண்டில் ரூ.1,200 கோடி திட்ட மதிப்பீட்டில் மறுகட்டுமானம் செய் யப்படும். மேம்படுத்தப்பட்ட மனை களுக்கான முழு த்தொகை செலுத்திய 10 ஆயிரம் குடும்பங்களுக்கு நீண்ட காலமாக வழங்கப்படாமல் உள்ள விற்பனை பத்திரங்கள் வழங்கப்படும்.

வாரிய அடுக்குமாடி குடியிருப் புகளுக்கு முழுத்தொகை செலுத்திய 15 ஆயிரம் பயனாளிகளுக்கு நடப்பு நிதியாண்டில் விற்பனை பத்திரங்கள் வழங்கப்படும். கட்டுமானப் பணிகளின் தரத்தினை பல்வேறு நிலைகளில் உறுதி செய்ய இந்திய தொழில்நுட்ப கழகம் (அய்.அய்.டி.) மற்றும் அண்ணா பல் கலைக்கழகம் போன்ற மேன்மையான மூன்றாம் தரப்பு தரக்கட்டுப்பாடு வல்லுநர் குழுக்கள் அமைக்கப்படும்.

புனரமைப்பு

மறுகட்டுமானம் செய்யும் காலத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் ரூ.8 ஆயிரம் கருணைத் தொகை ரூ.24 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். பராமரிப்பின்றி பழுதடைந்த அடுக்கு மாடிக் குடியிருப்புகள் ரூ.70 கோடி செலவில் எழில்மிகு தோற்றப் பொலிவு பெறும் வகையில் புனர மைக்கப்படும்.

குடியிருப்போர் நலச் சங்கங்களின் பங்களிப்புடன் நம் குடியிருப்பு - நம் பொறுப்பு என்ற திட்டத்தின் மூலம் பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும். வசதி யற்ற பயனாளிகளின் சிரமத்தினை குறைக்கும் வகையில் வங்கிக் கடன் பெற்று பங்களிப்பு தொகை செலுத்த வழிவகை செய்யப்படும்.

திறன் மேம்பாட்டு பயிற்சி

புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளில் மாற்றுத்திறனாளி களின் தேவைக்கேற்ப வசதிகள் அமைக் கப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் தரைத்தள வீடுகள் ஒதுக்கீடு செய்யப் படும். தேசிய மற்றும் பன்னாட்டு போட்டிகளில் பங்கேற்கும் குடிசைப் பகுதி வாழ் இளைஞர்களுக்கு முழு நிதியுதவி வழங்கி விளையாட்டுத் திறன் மேம்படுத்தப்படும்.

வாரிய திட்டப்பகுதிகள் மற்றும் குடிசைப் பகுதிகளில் வாழும் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கி வேலை வாய்ப்புகள் பெற ஊக்கு விக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

No comments:

Post a Comment