புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி அவர்களின் 70ஆவது பிறந்த நாள் தோழர்கள் நேரில் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 2, 2021

புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி அவர்களின் 70ஆவது பிறந்த நாள் தோழர்கள் நேரில் வாழ்த்து

புதுச்சேரி, செப்.2  சுயமரியாதைச் சுடரொளி காரை. சி.மு.சிவம் அவர் களின் மகனும், புதுச்சேரி அருணா கிளினிக்கல் லேப் முதன்மை செயல் அதிகாரி தோழர் சிவ.வீ.அழகரசன் அவர்களின் தந்தையுமான புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் பெரியார் பெருந்தொண்டர் சிவ. வீரமணி அவர்களின் 70ஆவது பிறந்த நாள் காணொலி காட்சி வழியாக நடைபெற்றது.

புதுச்சேரியில் கழக தோழர்கள் 21.8.2021 அன்று அவரது இல்லம் சென்று பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

புதுச்சேரி பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளரும், ராதே அறக் கட்டளை தலைவருமான இன்சினியன் இரா.தேவதாஸ், புதுச்சேரி பகுத்தறி வாளர் கழக மேனாள் செயலாளரும், மின்துறை கூட்டுறவு வங்கி மேலா ளருமான கோ.மு.தமிழ்ச்செல்வன், எழுத்தாளர் புதுவை சீனு.தமிழ்நெஞ்சன், புதுச்சேரி தலைமை செயலக மேனாள் நிதித்துறை செயலாளரும், பெரியார் பெருந்தொண்டருமான எஸ்.தட்சிணாமூர்த்தி, புதுச்சேரி நகராட்சி கழக தலைவர் மு.ஆறுமுகம், மூலைக்குளம் இரா.சாம்பசிவம், புதுச் சேரி கழக இளைஞரணி தோழர் கோ.அல்போன்ஸ், .சிவராசன் மற்றும் கழக தோழர்கள் பயனாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துகளை கூறினர்.

கோவில் நுழைவு போராட்டத்தில் சென்றவர் யார்? எதிர்த்தவர் யார்? ஜாதி தீண்டாமை ஒழிப்பு போராட்ட அறப்போர், விவேகானந்தரும் பகுத் தறிவும், ஊழலின் ஊற்று ஒரு தொடர் கதை எனும் புத்தகங்களை சிவ.வீரமணி அவர்கள் அளித்து மகிழ்ந்தார்.

No comments:

Post a Comment