பாராட்டத்தக்க அறிவிப்பு சிலம்பொலி செல்லப்பன், தொ.பரமசிவன் உள்ளிட்ட 6 தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 1, 2021

பாராட்டத்தக்க அறிவிப்பு சிலம்பொலி செல்லப்பன், தொ.பரமசிவன் உள்ளிட்ட 6 தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை

அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

சென்னை,செப்.1- சிலம்பொலி செல்லப்பன், பரமசிவன் உள்ளிட்ட 6 தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

சட்டப்பேரவையில் தமிழ்வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துப் பேசிய பின்னர் வெளியிட்ட அறிவிப்புகள்: இன்றைய தலைமுறையினரை திருக்குறள் சென்றடையும் வகையில் ரூ.2 கோடி மதிப்பீட்டில்தீராக் காதல் திருக்குறள்என்ற பெயரில் கலை வடிவங்களுடன் ஊடகங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். வெளிநாடு, வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க ரூ.1 கோடியில் தமிழ் பரப்புரைக் கழகம் உருவாக்கப்படும்.

பள்ளிகளில் திறனறி தேர்வு நடத்தி ஆண்டுதோறும் 1,500 மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1,500 ஊக்கத்தொகை 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

தமிழ் அறிஞர்கள் சிலம்பொலி செல்லப்பன், தொ.பரமசிவன், இளங்குமரனார், முருகேச பாகவதர், சங்கரவள்ளி நாயகம், செ.ராசுஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை யாக்கப்பட்டு பரிவுத்தொகை வழங்கப்படும்.

சங்க இலக்கிய வாழ்வியல், ஓவியங்களாகவும், எளிய விளக்கத்துடனும்காபி டேபிள்புத்தகமாக வெளியிடப் படும். கோயில்களில் தேவாரம், திருவாசகம், திவ்யப்பிரபந்தம் ஆகியவற்றுடன் திருக்குறள் வகுப்புகளும் நடத்தப்படும்.

தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்களின் பிறந்த நாளன்று இலக்கியக் கூட்டங்கள் நடத்த ரூ.15 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும். தமிழில் பெயர் எழுதும்போது முன் எழுத் தையும் (இனிஷியல்) தமிழிலேயே எழுதும் நடைமுறை ஊக்குவிக்கப்படும்.

முனைவர் ஆய்வு (பிஎச்.டி)சுருக்கம் மற்றும் ஆய்வுத் தொகுப்புகள் தமிழில் தொகுக்கப்பட்டு தமிழ் இணையக்கல்வி கழகத்தின் வாயிலாக இணையதளத்தில் வெளியிடப்படும்..

தந்தை பெரியார் நகர் நலச்சங்க துவக்கம்  பெயர் பலகை திறப்பு

திருச்சி, செப்.1 திருச்சி மாவட்டம் பழங்கனாங்குடியில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் நகர் நலச்சங்கம்  துவக்க விழா மற்றும் நகர் பெயர் பலகை திறப்பு விழா நிகழ்ச்சி 22.8.2021 அன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு லோக்ஜனசக்தி கட்சி, மாநில துணைத் தலைவர், தந்தை பெரியார் நகர் கவுரவ தலைவருமான   நம்பியார் தலைலமை வகித்தார். தந்தை பெரியார நகர் நலச்சங்க செயலாளர் பொன்னுசாமி வரவேற்புரையாற்றினார். தந்தை பெரியார் நகர் நலச்சங்க தலைவர் .சு.இளங்கோவன் முன்னிலை வகித்தார். பழங்கனாங்குடி முதல்நிலை ஊராட்சி மன்றத்தலைவர் பன்னீர்செல்வம் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் நகர் பெயர் பலகையினை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் திருச்சி சங்க நல்லுசாமி வாழ்த்துரை வழங்கினார். நிறைவாக எத்திராஜ் நன்றி கூறினார்

இந்நிகழ்ச்சியில் பெரியார் நகர் நலச்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டுக்கு தினசரி 8 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, செப்.1 தமிழ்நாட்டுக்கு இந்த மாதம் 1 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்புகிறது. அந்த வகையில் தினசரி 8 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப் பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்து உள்ளார்.

சென்னை அயனாவரத்தில் உள்ள .எஸ்.அய். மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை பிரிவை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சி.வி.கணேசன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். பின்னர், மரக்கன்றுகளை நட்டு, தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை மருத்துவ மனைக்கு அர்ப்பணித்தனர். இதையடுத்து செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- தமிழ்நாட்டில் சில நாட்களாக 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இதை இன்னும் அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சென்னையை போலவே மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி முகாம்கள் அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளிலும் தடுப்பூசி முகாம்கள் அமைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஒன்றிய அரசிடம் இருந்து தடுப்பூசிகள் தாராளமாக வந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தின் தடுப்பூசி செயல்பாடுகளை கண்டு ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்தில் கூடுதலான தடுப்பூசிகளை ஒன்றிய அரசு அனுப்பி உள்ளது.

அந்த வகையில் ஜூன் மாதம் 52 லட்சம், ஜூலை மாதம் 55 லட்சம், ஆகஸ்டு மாதம் 57 லட்சம் தடுப்பூசிகள் என மத்திய அரசால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் செப்டம்பர் மாதம் 1 கோடியே 4 லட்சம் தடுப்பூசிகளை தருவதாக ஒன்றிய அரசு தகவல் அனுப்பி உள்ளது. அதன்படி செப்டம்பர் மாதம் தினசரி 7 முதல் 8 லட்சம் தடுப்பூசிகள் போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment