பெங்களூரு, செப்.1 செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி முதல், 6ஆம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது
கருநாடக மாநிலத்தில், கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு விகிதம் 2 சதவீதத்திற்கும் கீழ் உள்ள பகுதிகளில், வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி முதல், 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.
இந்தியாவில், கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வருகிறது. இதை அடுத்து ஊரடங்கில் மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலன் கருதி, பள்ளி மற்றும் கல்லூரி
களை மாநில அரசுகள் திறந்து வருகின்றன.
இந்நிலையில், கருநாடக மாநிலத்தில், கரோனா தொற்று பாதிப்பு விகிதம் 2 சதவீதத்திற்கும் கீழ் உள்ள தாலுகாக்களில், வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி முதல், 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என, அம்மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் நாகேஷ் அறிவித்துள்ளார்.
ஒன்றிய மாநில அரசுகள் வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, 50 சதவீத மாணவர்களுடன் பள்ளிகளில் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்படும் என்றும், ஒரு வாரத்தில் அய்ந்து நாட்களுக்கு பள்ளிகள் செயல்படும் என்றும், சமூக இடைவெளி, முகக் கவசம் கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் கட்டாயம் கரோனா தடுப்பூசி பேட்டிருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
முன்னதாக, கருநாடக மாநிலத்தில், 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கடந்த 23ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment