கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
ஓட்டாவா, செப். 30- இந்தியா உள்ளிட்ட பெரும்பா லான நாடுகளில் 4ஜி பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சில நாடுகள் அடுத்த தலை முறையான 5ஜி வயர் லெஸ் நெட்வொர்க்கை பயன்படுத்த தொடங்கி யுள்ளன. சீனாவின் மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ஹூவாய் 5ஜி சேவை வழங்கி வருகிறது.
பெரும்பாலான நாடுகள் 5ஜியை பயன் படுத்துவதால், தங்களு டைய நாட்டின் ரகசியங் கள் திருடப்படுவதாக அனுமதி கொடுக்காமல் இருக்கின்றன. அமெ ரிக்கா ஹூவாய் நிறுவ னத்தின் மீது இதுகுறித்து குற்றம்சாட்டியுள்ளது. இந்தியாவில் சோத னைக்கு அனுமதி வழங் கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கன டாவில் 5ஜி நெட்வொர்க் வழங்க ஹூவாய் நிறுவ னத்திற்கு அனுமதி வழங் குவது குறித்து சில வாரங் களில் முடிவு செய்யப்படும் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ஆனால், கனடாவின் தொலைத்தொடர்பு நிறு வனங்களான பெல் கனடா, டெலஸ் கார்ப ரேசன் போன்ற நிறுவ னங்கள் ஹூவாய் 5ஜி நெட்வொர்க்கை பயன் படுத்தமாட்டோம் எனத் தெரிவித்துள்ளன.
கனடாவும் அதன் பாதுகாப்பு நிறுவனங் களும் ஹூவாய் நிறுவனத் தில் இருந்து உபகரணங் களைப் பயன்படுத்தலாமா? என்று ஆய்வு செய்து வருகின்றன, ஏனெனில் தொலைப்பேசி சாதனங் கள் அய்ந்தாம் தலைமுறை தொழில்நுட்பத்தை உரு வாக்கத் தயாராகி வரு கின்றன. இது மருத்துவ சாதனங்கள், பிற பயன் பாடுகளுக்கு வசதியாக வடிவ மைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment