சென்னை, செப்.3 வாகனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு காப்பீடு கட் டாயம் என்ற உத்தரவை பிறப் பித்த நீதிபதியே அதை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
சாலை விபத்து தொடர் பான ஒரு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் அனைத்து புதிய வாகனங்களுக் கும் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் வாகன உரி மையாளர், ஓட்டுநர், பயணி என அனைவரையும் உள்ள டக்கும் வகையில் வகையில் 5 ஆண்டுகளுக்கு காப்பீடு செய் வதை கட்டாயமாக்க வேண் டும் என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவை தொடர்ந்து போக்குவரத்துத்துறை சார்பி லும் அதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
இந்தநிலையில், பொதுக் காப்பீட்டு மன்றம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘உயர்நீதிமன்ற உத் தரவை செயல்படுத்த காப் பீட்டு நிறுவனங்கள் தயாராகி வரும் அதே நேரத்தில், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற் றும் மேம்பாட்டு ஆணையத் தின் பிரதிநிதிகளாக காப்பீட்டு நிறுவனம் செயல்படுவதால், இந்த ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் காப்பீட்டு நிறு வனங்களால் சேவைகளில் எந்த மாற்றமும் செய்ய இய லாது. ஆணையத்தின் ஒப்பு தலை பெற்ற சாப்ட்வேரில் உரிய மாற்றம் செய்ய 3 மாதம் கால அவகாசம் வேண்டும்‘ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வைத்தியநாதன், பொதுக் காப்பீட்டு மன்றம், காப்பீட்டு ஆணையம், தமிழ்நாடு போக்கு வரத்து துறை கூடுதல் தலைமை செயலாளர், போக்குவரத்து துறை இணை ஆணையர் ஆகியோரை இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்த்து அவர்கள் பதில் அளிக்க உத் தரவிட்டார். அதேவேளையில், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் வாகனங்களுக்கு 5 ஆண்டு களுக்கு காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என்ற உத்தரவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
பின்னர், வழக்கு விசார ணையை செப்டம்பர் 13ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார் என் பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment