ஆப்கானிஸ்தானில் 5 பத்திரிகையாளர்கள் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 10, 2021

ஆப்கானிஸ்தானில் 5 பத்திரிகையாளர்கள் கைது

காபூல், செப்.10 இடைக்கால அரசின் பிரதமரை அறிவித்த நிலையில், 8.9.2021 அன்று  பத்திரிகையாளர்கள் 5 பேரை தலிபான்கள் கைது செய்து உள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் கடந்த மே மாத இறுதியில் இருந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தொடங்கின. அதனைத் தொடர்ந்து  கடந்த 15ஆம் தேதி ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தலிபான்கள் வசம் சென்றது.

இதையடுத்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை விமானங்கள் மூலமாக பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் இறங்கின.

இதற்கிடையில் தலிபான்களுக்கு பயந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி செல்ல முயற்சித்து வருகின்றனர்.

மக்கள் மட்டுமல்லாமல் அரசியல் கட்சி தலைவர்கள், எம்.பிக்கள் என பலர் வெளிநாடுகளில் அடைக்கலம் தேடுகின்றனர்.

ஆனால் இதை எல்லாம் கண்டு கொள்ளாமல்  தலிபான்கள் ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றார்கள்.

இடைக்கால அமைச்சரவையையும் , இடைக்கால பிரதமரையும் தலிபான்கள் அறிவித்து உள்ளனர்.

இந்த நிலையில்  முந்தைய ஆட்சியின்போது அவர்களுக்கு எதிராக செயல்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்களை கைது செய்தும் மற்றும் கொலை செய்தும் வருகின்றனர்.

 இடைக்கால அரசின் பிரதமரை அறிவித்த நிலையில்,  பத்திரிகையாளர்கள் 5 பேரை தலிபான்கள் கைது செய்து உள்ளனர்.

தலிபான்களால் கைது  செய்யப்பட்ட  இரண்டு பத்திரிகை யாளர்கள், முதுகில் காயம் ஏற்பட்ட அடையாளங்களுடன் எடுக்கபட்ட ஒளிப்படம்  சமூக வலைதளங்களில் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. தலிபான்கள்  ஆட்சியில் எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறதோ  என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment