அரசுப் பணியாளர்களின் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.5 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 3, 2021

அரசுப் பணியாளர்களின் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.5 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை, செப். 3- அரசுப் பணியாளர்களின் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.5 லட்சமாக உயர்வு குறித்து தமிழ்நாடு நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி நிதித்துறை அமைச்சர் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், அரசுப்பணியாளர் களின் குடும்ப பாதுகாப்பு திட்டத்தில் மீண்டும் திருத்தம் செய்து அறிவிக்கப்பட்டது. அதில், பணியில் இருக்கும் போது மரணமடையும் அரசு பணியாளர் குடும்ப பாதுகாப்பிற்கான நிதி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. அதற்கான அரசு ஊழியரின் பங்களிப்புத் தொகை ரூ.60இல் இருந்து ரூ.110-ஆக உயர்த்தப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர்களின் குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூ.5 லட்சமாகவும், அந்தத் திட்டத்திற்கான பங்களிப்புத் தொகை ரூ.110 ஆகவும் உயர்த்தி உத்தரவிடப்படுகிறது. இந்த உத்தரவு இந்த மாதம் (செப்டம்பர்) 1ஆம் தேதியில் இருந்து செயல்பாட்டிற்கு வரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை புறநகர் மின்சார ரயில்சேவை - தளர்வுகள் அறிவிப்பு

சென்னை, செப்.3- சென்னை புறநகர் மின்சார ரயில்களில் ஆண் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட நேர கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து மின்சார ரயிலில் அத்தியாவசியப் பணியாளர்கள்,  பெண்கள், 12 வயது உள்பட்டோர் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.  ஆண் பயணிகள் மட்டும் காலை 7.30 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7.30 மணி வரையும் அனு மதிக்கப்பட மாட்டார்கள் என தெற்கு ரயில்வே கட்டுப் பாடு விதித்து இருந்த நிலையில், ஆண் பயணிகளும் அனைத்து நேரமும் பயணிக்கலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.  ஆனால் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் உடனடியாக நடை முறைக்கு வருவதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

திருமண நிதியுதவித் திட்டம்

தகுதியான பயனாளிகளுக்கு மட்டும் வழங்கப்பட வேண்டும்: சமூகநல இயக்குநரகம் சுற்றறிக்கை

சென்னை, செப்.3 திருமண நிதியுதவி திட்ட பயன்களை வசதி படைத்தவர்களுக்கு வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கள அலுவலர்களுக்கு அரசு எச் சரிக்கை. விடுத்துள்ளது

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட சமூக நல அலு வலர்களுக்கும் சமூக நல இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் அனைத்து திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் ரூ.25 ஆயிரம் மற்றும் ரூ.50 ஆயிரம் நிதியுதவி தொகை, 8 கிராம் தங்க நாணயம் ஆகியவை வழங்கப்பட்டு வரு கின்றன.

இந்த திட்டத்திற்காக 2018ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 4.96 லட்சம் பேர் விண்ணப்பித்து, தகுதியற்ற விண்ணப்பங்கள் போக தற்போது 3.34 லட்சம் தகுதியுள்ள விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.

இதில் பயனாளிகளை தேர்வு செய்ய மனுதாரர்களின் இருப்பிடத்திற்குச் சென்று கள ஆய்வு செய்வதற்கு பல்வேறு வழிகாட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

தகுதியான பயனாளிகளுக்கு மட்டும் நிதியுதவி மற்றும் தங்க நாணயம் வழங்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையான தகவல்களை மறைத்து வசதி வாய்ப்புள்ள மனுதாரருக்கு பயன் வழங்கி அறிக்கை சமர்ப்பிக்கும் கள அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்வாக்குப்பதிவு நேரத்தில் மாற்றம்

சென்னை, செப்.3- தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு நேரம் காலை 7 முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதிமுக ஆட்சியில் வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்களாக ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக் குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய மாவட்டங்கள் உருக்கப்பட்டன. 27 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள் முடிந்த நிலையில் இந்த 9 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறவில்லை. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்க உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், கரோனா தொற்று பாதுகாப்பு வழி முறைகள் காரணமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு நேரம் மாற்றியமைப்பட்டுள்ளது. அதன்படி காலை 7 முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவள்ளி சுற்ற றிக்கை அனுப்பியுள்ளார்.

இதற்கு முன்பு காலை 7 முதல் 5.30 மணி வரை இருந்த நேரம் கரோனா தொற்று காரணமாக காலை 7 முதல் 7 வரை மாற்றப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment