ஆய்வாளர்கள் எச்சரிக்கை
புதுடில்லி,செப்3- அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக 40 சதவீத இந்தியர்களின் ஆயுள் 9 ஆண்டுகளுக்கு மேல் குறைய வாய்ப்புள்ளது என்று சிகாகோ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகம் காற்று தர வாழ்க்கை குறியீடு (ஏகியூஎல்அய்) என்ற ஆய்வை இந்தி யாவில் நடத்தியது. இது குறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக் கையில் கூறியிருப்பதாவது:
உலகிலேயே மிகவும் காற்றுமாசடைந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இங்கு அதிகப்படியான காற்று மாசு நிலவுகிறது. இதனால், 40 சதவீத இந்தியர்களின் ஆயுள் 9 ஆண்டுகளுக்கு மேல் குறைய வாய்ப்புள்ளது
டில்லி உள்பட மத்திய, கிழக்கு மற்றும் வட இந்திய பகுதிகளில் வாழும் 4.8 கோடிக்கும்மேற்பட்டோர் உயர்ந்த காற்று மாசு அளவின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். உயர்ந்த அளவிலான காற்று மாசு காலப்போக்கில் புவியியல் ரீதியாக விரிவடைந்துள்ளது. இது பெரிய ஆபத்தாக இருக்கும்.
எடுத்துக்காட்டாக, மத்தியப் பிரதேசம், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் காற்றின் தரம் மோசமாகியுள்ளது. வட இந்தி யாவில் வசிக்கும் மக்கள் தங்கள் வாழ்நாளில் 9 ஆண்டுகளை இந்த காற்று மாசுவால் இழக்கும் அபாயம்உள்ளது. தற்போது மராட்டியம், மத்தியப் பிரதேசத்தில் மக்கள் தங்கள்வாழ்நாளில் 2.5 ஆண்டுகள் முதல்2.9 ஆண்டுகள் வரை இழக்கக்கூடும்.
2019ஆம் ஆண்டு, இந்தியாவில் தொடங்கப்பட்ட தேசிய தூய்மை காற்று திட்டம் அபாயகரமான மாசுவை கட்டுப் படுத்துவதில் சாதனை படைத்துள்ளது. அதன் இலக்கை தக்கவைத்துள்ளது.
இதன் மூலம், நாட்டு மக்களின் மொத்த ஆயுள் 1.7 ஆண்டுகளாக உயரும். குறிப்பாக, டில்லி மக்களின் ஆயுள் 3.1 ஆண்டுகள் அதிகரிக்கும். இந்தியா, வங்கதேசம், நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் காற்று தர வாழ்க்கை குறி யீட்டை குறைத்தால், இங்குள்ள மக்கள் 5.6 ஆண்டுகள் கூடுத லாக வாழ முடியும். இதற்கு உலக சுகாதார அமைப்பு வெளியிட் டுள்ள வழிகாட்டுதல்களின்படி காற்றின் மாசுவைக் குறைக்க வேண்டும்.
கடந்த 2000ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்த வாகனங்களை விட தற்போது 4 மடங்கு அதிகமாகியுள்ளது. வாகனம் வெளியிடும் புகை, வைக்கோல் எரித்தல், தொழிற்சாலை கழிவுகள், மின் உற்பத்தியால் ஏற்படும் கழிவுகள் ஆகியவற்றால் காற்று மாசு அதிகரிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment