பெய்ஜிங், செப்.10 தலிபான் தீவிர வாதிகள் கைப்பற்றியுள்ள ஆப்கானிஸ் தானுக்கு 3.10 கோடி டாலர் மதிப்பிலான உதவிகள் வழங்கப்படும் என சீன அரசு அறிவித்து, தலிபான்கள் அரசுக்கு புகழாரம் சூட்டியுள்ளது.
சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹூவா சுன்யின் அளித்த பேட்டியில் ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடனான சந்திப்பில் ஆப்கன் மக்களுக்கு உதவும் வகையில் 3.10 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான நிதியுதவி வழங்க முடிவு எடுக்கப்பட்டது.
இதன்படி ஆப்கன் மக்களுக்கு உணவு, குளிர்காலத்தை சமாளிக்கும் பொருட்கள், தடுப்பூசிகள், மருந்துகள் போன்றவை தலிபான் அரசிடம் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி வெளியிட்ட அறிவிப்பில், ஆப்கானிஸ்தானுக்கு முதல்கட்டமாக 30 லட்சம் தடுப்பூசிகளை சீனா வழங்கும். அமெரிக்க நிர்வாகத்தில் ஆப்கானிஸ் தான் இருந்துள்ளது. அமெரிக்கா இங்கி ருந்து சென்றாலும், தனது பொறுப்புகளை உணர்ந்து ஆப்கன் மக்களுக்கு உதவ வேண்டும், வளர்ச்சிக்கு துணையாக இருக்க வேண்டும். ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, சுதந்திரத்தை மதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
சீனாவின் மேற்குப்பகுதியான ஜின்ஜி யாங்கின் வக்கான் பகுதிவரை ஏறக்குறைய 80கி.மீ எல்லையை ஆப்கானிஸ்தானுடன் சீனா பகிர்ந்துள்ளது.
சாலை அமைத்தல் மற்றும் புனர மைப்புப் பணிகள் வழியாக அதிகமான முதலீட்டை சீனா செய்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் தலிபான் தலைவர்கள், சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சார்பில் தியான்ஜின் பகுதியில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் சீனா தரப்பில் பங்கேற்ற அதிகாகள் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ராணுவம் மற்றும் அரசியல் ரீதியான சக்தியை கொண்டுள்ளார்கள். நாட்டின் அமைதிப் பணி, மறுசீரமைப்பு, புனரமைப்புப் பணிகளிலும் முக்கியப் பங்காற்றி வருகின்றனர் என புகழாரம் சூட்டினர்.
இதற்கு பதிலாக தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லாஹ் முஜாஹித் கூறுகையில் எங்கள் அண்டை நாடுகளில் சீனா மிகுந்த முக்கியமான, வலிமையான நாடு. அந்நாட்டு எங்களுக்கு சாதகமான உறவும், நல்ல நட்புறவும் கடந்த காலத்திலிருந்தே இருக்கிறது.
வரும் காலத்தில் சீனாவுடனான உறவை வலிமைப்படுத்த விரும்புகிறோம், இணக்கத்தை வலிமைப்படுத்த உள் ளோம். ஆப்கன் மண்ணைப் பயன்படுத்தி சீனாவுக்கு எதிராக எந்தவிதமான அழிவு சக்திகளையும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment