குவைட்டோ, செப். 30- தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் குயாக்வாலி நகரில் ஒரு சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு கொடூர குற்றங்களில் ஈடு பட்ட குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் பல்வேறு குழுக்களாக உள்ளனர். அவர்களுக்குள் அவ்வப்போது குழு மோதல்களும் அரங்கேறிவருகிறது.
இந்நிலையில் குயாக்வாலியில் உள்ள சிறைச்சாலையில் இருதரப்பு கைதிகள் இடையே பயங்கர மோதல் வெடித் தது. கைதிகள் இரு தரப்பினரும் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு, கத்திக்குத்து மற்றும் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இருதரப்பினர் இடையே நடந்த இந்த மோத லில் மொத்தம் 24 கைதிகள் உயிரிழந்தனர். மேலும் 48 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதலை தொடர்ந்து சிறைச்சாலையில் பாது காப்பு படையினர் குவிக்கப்பட்டனர். இரு தரப்பினர் இடையேயான மோதல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது. மேலும் மோதல் நடைபெறுவதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
1970ஆம் ஆண்டுக்குப் பிறகு சிங்கப்பூர் மக்கள் தொகை சரிவு
சிங்கப்பூர், செப். 30- சிங்கப்பூரில் 1970ஆம் ஆண்டுக்கு பிறகு அந்த நாட்டின் மக்கள் தொகை 54 லட்சத்து 50 ஆயிரமாக சரிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிங்கப்பூரின் தேசிய மக்கள் தொகை மற்றும் திறமை பிரிவு நடத்திய கணக்கெடுப்பின் முடிவில் கடந்த ஜூன் மாத நிலவரப்படி நாட்டின் மொத்த மக்கள் தொகை கடந்த ஆண்டை விட 4.1 சதவீத குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.
இது சிங்கப்பூரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்பட்ட 1970ஆம் ஆண்டுக்கு பிறகு நிகழ்ந்த மிகப்பெரிய சரிவாக பார்க்கப்படுகிறது. சிங்கப்பூரில் குடி யேறுபவர்களின் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சிய டைந்ததே மக்கள் தொகை எண்ணிக்கை குறைய முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. கரோனா பயண கட்டுப் பாடுகள் மற்றும் நிச்சயமற்ற பொருளாதார சூழல் காரண மாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறைந்து வருவதால், நாட்டில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்ததாக தெரிகிறது. சிங்கப்பூர் குடிமக்களின் எண் ணிக்கை கடந்த ஆண்டை விட 0.7 சதவீதம் குறைந்து 35 லட்சமாக குறைந்துள்ளதாகவும், நிரந்தர குடியிருப்பாளர் களின் எண்ணிக்கை 6.2 சதவீதம் குறைந்து 4 லட்சத்து 90 ஆயிரமாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment