அரசு போக்குவரத்து கழகத்துக்கு 2,200 புதிய பேருந்துகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 9, 2021

அரசு போக்குவரத்து கழகத்துக்கு 2,200 புதிய பேருந்துகள்

சட்டப் பேரவையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு

சென்னை, செப்.9 போக்கு வரத்து கழகத்துக்கு 2,200 புதிய பேருந்துகள் சட்டப் பேர வையில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிவிப்பு.

தமிழ்நாடு சட்டப் பேர வையில் நேற்று (8.9.2021) மாலை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் புதிய அறிவிப்புகளை வெளி யிட்டு பேசியதாவது:-

தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக பேருந்துகளை நவீனமாக்கும் பொருட்டு ஜெர்மனி வங்கி நிதியுதவியுடன் புதிதாக பி.எஸ்.-6 குறியீட்டிற்கு இணக்கமான 2,213 டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.

அரசு போக்குவரத்து நிறு வனங்களின் கட்டடங்களின் கூரையில் சூரியசக்தி மின் னாற்றல் தகடுகள் நிறுவப்படும். காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப் படும். ஆதார் அட்டையை ஆவ ணமாக பயன்படுத்தி பொது மக்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே போக்குவரத்து சேவைகளான பழகுநர் உரிமம், ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம் ஆகிய சேவைகள் வழங்குவது நடை முறைப்படுத்தப்படும்.

திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டார போக் குவரத்து அலுவலக கட்டுப் பாட்டின் கீழ் இயங்கும் திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்துக்கு ரூ.30 கோடியே 21 லட்சம் செலவில் சொந்த கட்டடம் கட்டப்படும். மதுரை மாவட் டம், மதுரை (தெற்கு) வட்டார போக்குவரத்து அலுவலகத் துக்கு சொந்த கட்டடமும், ஓட்டுநர் தேர்வு தளமும் ரூ.52.80 கோடி செலவில் கட் டப்படும். கோவை மாவட்டம், கோவை (வடக்கு) வட்டார போக்குவரத்து அலு வலகத் துக்கு ரூ.49.80 கோடி மதிப்பில் சொந்த கட்டடம் கட்டப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்

No comments:

Post a Comment