ஜெனீவா, செப். 1- சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், உலகம் முழுவதும் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21.78 கோடியைக் கடந்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 19.46 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 45.22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 1.85 கோடிக்கும் அதிகமா னோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர் களில் 1.13 லட்சத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவ லைக்கிடமாக உள்ளது.
கரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் ஆகி யவை முதல் 5 இடங்களில் உள்ளன.
தடுப்பூசி போட்டவர்களையும் தாக்கும் சி12 வகை கரோனா வைரஸ்
புதுடில்லி, செப். 1- தடுப்பூசியால் பெற்ற நோய் எதிர்ப்பு சக்தியையும் தாண்டி டெல்டா வகை வைரஸை போல மிக தீவிரமாக பரவக்கூடிய சக்தி கொண்ட சி12 வகை கரோனா வைரஸ் தென் ஆப்ரிக்கா உட்பட பல நாடுகளில் பரவி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்ட பிறகு புதிய வகை வீரியம் மிக்க கரோனா வைரஸ் மாறுபாடுகள் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் 2ஆம் அலைக்கு காரணமான டெல்டா வகை வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்துகிறது.
தற்போது அந்த வரிசையில் வீரியம் மிக்க சி12 வகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்காவில் தொற்று நோய்க்கான தேசிய நிறுவன ஆய்வாளர்கள் சி12 மரபணு மாற்ற கரோனா வைரஸை கண்டறிந்துள்ளனர். இந்த கரோனா வைரஸ் குறித்த மதிப்பிடப்படாத ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி தடுப்பூசி போட்டவர்களையும் தாக்கும் வீரியம் கொண்டதாக சி12 வகை வைரஸ் இருக்க வாய்ப்பு இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆல்பா மற்றும் பீட்டா வகை வைரஸ் பாதிப்பால் ஏற் கெனவே ஆன்டிபாடிகளை உருவாக்கிய நோயாளி களையும் மீண்டும் தொற்றும் திறன், சி12 வகை வைரசு களுக்கு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது என் றும் அந்த ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment