2 நாட்களில் 40 குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 1, 2021

2 நாட்களில் 40 குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு

.பி. பா... அரசு உண்மையை மறைப்பதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு

பெரோஷாபாத், செப்.1 உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் 40 குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்குப் பலியாகி உள்ளதாக வும், ஆதித்யநாத் அரசோ அதனை மூடிமறைப்ப தாகவும் பாஜக சட்ட மன்ற உறுப்பினர் ஒருவரே பகிரங் கமாக குற்றம் சாட்டியுள்ளார்.பெரோ ஷாபாத் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் மணிஷ் அசிஜா இது தொடர்பாக காணொலி ஒன்றை வெளியிட்டுள் ளார். அதில், பெரோஷா பாத் மாவட்டத் தில் கடந்த வாரத்தில் ஆகஸ்ட் 22 முதல் இது வரை டெங்கு காய்ச்ச லுக்கு 46 பேர் பலியாகி உள்ளனர்.

தாழ்வான இடங்களில் குப்பை களுடன் கலந்து மழைநீர்தேங்கியுள் ளது. இதனால் கொசுக்கள் உற்பத் தியாகி இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சியில் பல முறை புகார் செய்தும் நடவ டிக்கை இல்லை. இது போன்ற சூழலில் நட வடிக்கை எடுப்பதற்காக பெரோஷா பாத் திற்கு 50 வாகனங்களை .பி. அரசு கடந்த ஏப் ரலில் அனுப்பியது. எனி னும் இரண்டு தினங்களுக்கு முன்புதான் இந்த வாகனங்கள் தூய்மைப் பணியில் இறக்கி விடப் பட்டுள்ளன என்று பதிவிட்டுள் ளார். முதலமைச்சர் ஆதித்யநாத், திங்களன்று பெரோஷாபாத் மாவட்ட மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வுசெய்வதாக மாநில அரசு அறிவித்திருந்தது. ஆனால், அதற்கு முன்னதாக, பாஜக சட்ட மன்ற உறுப்பினர் மணிஷ் அசிஜா இந்தடுவிட்டர் பதிவை வெளியிட் டது பாஜக வட்டாரத்தில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்பு,  கரோனா தொற்றுப் பாதிப் பின் போதும்  இதுபோன்று சொந்தக் கட்சியினரிடமே ஆதித்யநாத் அரசு கடும் விமர்சனங்களுக்கு உள்ளா னது. கரோனா தடுப்பு நடவடிக் கைகளைஎடுப்பதில் .பி. முதல்வர் ஆதித்யநாத்தின் செயல்பாடுகள் படு மோசம் என்று பாஜகவைச் சேர்ந்த அன்றைய ஒன்றிய அமைச் சர் சந்தோஷ் குமார் கங்வார் துவங்கி ராம்கோபால் லோதி, ராம் இக்பால் சிங் உள் ளிட்ட மாநில அமைச் சர்கள், சட்டமன்ற, நாடா ளுமன்ற உறுப்பினர்களே  குற்றம் சாட்டியிருந்தனர் என்பது குறிப் பிடத்தக்கது.

No comments:

Post a Comment