இலங்கைக் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் நடுக்கடலில் தமிழ்நாடு மீனவர்களை மிரட்டி ரூ.1 லட்சம் பொருட்கள் கொள்ளை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 3, 2021

இலங்கைக் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் நடுக்கடலில் தமிழ்நாடு மீனவர்களை மிரட்டி ரூ.1 லட்சம் பொருட்கள் கொள்ளை

வேதாரண்யம், செப். 3 நடுக்கடலில் மீன்பிடித் துக்கொண்டு இருந்த தமிழ்நாடு மீனவர்களை மிரட்டி ரூ.1 லட்சம் பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள், கொள்ளையடித்து சென்றனர்.

நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறை மீனவ கிராம கடற்கரை யில் இருந்து நேற்று முன் தினம் (1.9.2021) மாலை சிவக்குமார் (வயது 32) என்பவருக்கு சொந்த மான படகில் ஆறுகாட் டுத்துறை சுனாமி நகரை சேர்ந்த சின்னத்தம்பி(72), சிவா(33), திருமால்(30), வெள்ளப்பள்ளம் மீனவர் காலனியை சேர்ந்த விவேக்(34) ஆகிய 4 மீன வர்கள் கோடியக்கரைக்கு கிழக்கே 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் நடுக் கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். இரவு 10 மணியளவில் இவர்களது படகு அருகே இரண்டு படகுகள் வந்தன. அந்த படகில் இலங்கை கடற்கொள்ளையர்கள் 6 பேர் இருந்துள்ளனர். அவர்கள் ஆறுகாட்டுத்துறை மீனவர்களின் படகை சுற்றி வளைத்துள்ளனர்.

பின்னர் ஆறுகாட்டுத் துறை மீனவர்களின் படகில் இலங்கை கடற்கொள் ளையர்கள் 4 பேர் கத்தி மற்றும் இரும்பு பைப்களு டன் ஏறி மிரட்டியுள்ள னர். அப்போது மீனவர் சிவா ஏதோ கூறியுள்ளார். உடனே அவரை கடலில் குதிக்குமாறு இலங்கை கடற்கொள்ளையர்கள் மிரட்டியுள்ளனர். வேறு வழியின்றி அவர் கடலில் குதித்து வலைகளை பிடித்துக்கொண்டு இருந்துள்ளார். பின்னர் அவர்கள், ஆறுகாட்டுத் துறை மீனவர்களின் பட கில் இருந்த பொருட்க ளான வாக்கி-டாக்கி, ஜி. பி.எஸ். கருவி, ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பேட்டரி, இன் வெர்ட்டர், கைப்பேசி உள்பட ரூ.1 லட்சம் மதிப் புள்ள பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டு தாங்கள் வந்த படகில் ஏறி அங்கிருந்து சென்று விட்டனர்.

அவர்கள் சென்ற பிறகு கடலிலில் மிதந்து கொண்டு இருந்த சிவா படகிற்கு திரும்பி வந்தார். பின்னர் மீனவர்கள் அனை வரும் ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு நேற்று (2.8.2021) வந்து சேர்ந்த னர்.

இதுகுறித்து படகு உரி மையாளர் சிவக்குமார் வேதாரண்யம் கடலோர காவல் படை காவல் நிலையத்தில் புகார் செய் தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment