1965 மொழிப்போரில் நஞ்சுண்டு உயிர்நீத்த விராலிமலை சண்முகம் அவர்களின் அண்ணன் விராலிமலை இரா.மாணிக்கம் பெரியார் உலகத்திற்கு இரண்டாம் தடவை நன்றி உணர்ச்சியுடன் நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 9, 2021

1965 மொழிப்போரில் நஞ்சுண்டு உயிர்நீத்த விராலிமலை சண்முகம் அவர்களின் அண்ணன் விராலிமலை இரா.மாணிக்கம் பெரியார் உலகத்திற்கு இரண்டாம் தடவை நன்றி உணர்ச்சியுடன் நன்கொடை

1965ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு மொழிப்போரில் கலந்து கொண்டு முடிவில் நஞ்சுண்டு உயிர் நீத்தமொழிப்போர் உயிர்த்தியாகி" விராலிமலை இரா.சண்முகம் அவர்களின்  அண்ணன், மொழிப்போர்த்தியாகிகள் குடும்பத்தார் சங்கச் செயலாளர், விராலிமலை இரா.மாணிக்கம் வணக்கமாக எழுதுவது நலம், நலமறிய அவா - தமிழர்கள் பகுத்தறிவு பெற, கல்வி பெற, வேலை வாய்ப்பு பெற, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டுமென வாழ்நாள் முழுதும் பாடுபட்ட தலைவர், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் தொண்டைப் போற்றும் வகையிலும் வருங்காலங்களில் மக்கள் அய்யாவின் சேவையை பொதுமக்கள் அறிந்து கொள்ளவும், சிறுகனூரில் உருவாகும் பெரியார் உலகத்திற்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் பெரியார் தொண்டால் வாழ்வு பெற்ற விராலிமலை இரா.மாணிக்கம் இரா.மா.தனலட்சுமி மாணிக்கம் ஆகியோர் ரூ. 25 ஆயிரம் நன்றி உணர்ச்சியுடன், 2ஆம் தடவையாக (முதல் முறையாக 8.9.2018இல்) வழங்குகிறோம் என தெரிவித்து தமிழர் தலைவரிடம் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். உடன்: திருச்சி ஆரோக்கியராஜ், லால்குடி ஆல்பர்ட், மலர்மன்னன்.

No comments:

Post a Comment