ஏமன் உள்நாட்டு போர்: வான்வெளி தாக்குதலில் பொதுமக்கள் 18 ஆயிரம் பேர் பலி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 10, 2021

ஏமன் உள்நாட்டு போர்: வான்வெளி தாக்குதலில் பொதுமக்கள் 18 ஆயிரம் பேர் பலி

அய்.நா. தகவல்

சனா, செப்.10 ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டு முதல் சண்டை நடைபெற்று வருகிறது.

இந்த உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரிக்கிறது. அதேபோல் ஏமன் அரசு படைகளுக்கு ஆதரவாக சவுதி தலைமையினான கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்திவருகிறது.

 இந்த உள்நாட்டு போர் காரணமாக ஏமனில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், 2015 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஏமன் உள்நாட்டு போரில் வான்வெளி தாக்குதலில் மட்டும் இதுவரை பொதுமக்கள் 18 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என அய்.நா. சபை தெரிவித் துள்ளது.

No comments:

Post a Comment