தமிழ்நாட்டில்18 இடங்களில் புதிய தொழில் பூங்காக்கள் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 1, 2021

தமிழ்நாட்டில்18 இடங்களில் புதிய தொழில் பூங்காக்கள் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

சென்னை, செப்.1 தமிழ் நாட்டில் 18 இடங்களில் புதிய தொழில் பூங்காக்கள் உருவாக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென் னரசு கூறியுள்ளார்.

தமிழக சட்டசபையில் தொழில்துறைக்கான கொள்கை விளக்கக் குறிப் பை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (31.8.2021)  தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்ப தாவது:-

இந்திய திறன் அறிக்கையின்படி அதிக வேலை வாய்ப் புள்ள மாநிலங்களில் தமிழ்நாடு 2-ஆவது இடத்தை பிடித்துள்ளது. வேலை வாய்ப்பை அதிகம் அளிக்கும் நகரங்களில் முதல் 10 நகரங்களில் சென்னை உள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள தொழில் பூங்காக் களில் 40 ஆயி ரம் ஏக்கர் பரப்பளவில் நில வங்கிகள் உள்ளன. தொழில் ரீதியாக பின்தங்கிய மாவட்டங் களில் கவனம் செலுத்தி அந்த மாவட்டங்களில் தொழில் பூங் காக்களை அமைப்பதன் மூலம் நிலக் கையிருப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக சிப்காட் நிறுவனத்தால் புதிய நில வங்கிகள் உருவாக்கப் படும். அடுத்த 5 ஆண்டுகளில் 45 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் புதிய தொழில் பூங்காக்கள் அமைப் பதற்கான நில வங்கிகள் உருவாக்கப்படும்.

18  இடங்களில்...

தமிழ்நாட்டில் முதலீடு செய் யும் முதலீட்டாளர்கள் மற்றும் அவர்களின் ஊழியர்களுக்கு மேம் பட்ட சூழல் அமைப்பை வழங்குவதற்காக அந்தந்த நாட்டுக்கு ஏற்றவாறு ஒருங் கிணைந்த தொழில் நகரியங்களை நிறுவ அரசு திட்டமிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட் டம் சிலாநத்தம், அல்லி குளம், வேலாயுதபுரம், நெல்லை கங்கை கொண் டான், திருவண்ணாமலை மேல்மா, ராணிப்பேட்டை பனப் பாக்கம், கிருஷ்ணகிரி சூளகிரி, குருபரப்பள்ளி, திருவள்ளூர் செங்காத்தாக் குளம், காஞ்சிபுரம் வல்லப் பாக்கம், மதுரமங்கலம், சிவகங்கை இலுப்பைக்குடி, தேனி பூமாலைக்குண்டு, நாகை வண்டு வாஞ்சேரி, விருதுநகர், விழுப்புரம், நாமக்கல், தருமபுரி (விரிவாக்கம்) ஆகிய 18 இடங்களில் புதிய தொழில் பூங்காக்களை உரு வாக்கும் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

நன்னீர் ஆலைகள்

பன்னாட்டு அறை கலன் பூங்கா (தூத்துக்குடி), மருத்துவ உபகரண தொழில்பூங்கா (சென் னை ஒரகடம்), தோல் பொருள் தொழில்பூங்கா (ராணிப் பேட்டை), உணவுப்பூங்கா (திண்டிவனம், தேனி), மின் வாகனப்பூங்கா (மாநல் லூர்) ஆகியவை அங்குள்ள சிப்காட் தொழில் பூங்காக் களில்உருவாக்கப்

படும்.

தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி களில் அமைந் துள்ள தொழிற்சாலைகளின் நீர்தேவையை பூர்த்தி செய்ய 60 மில்லியன் லிட் டர் கொள்திறன் கொண்ட கடல்நீரை நன்னீ ராக்கும் ஆலை ஒன்றை செயல் படுத்த நடவடிக்கை எடுக் கப் படுகிறது. கெலவரப் பள்ளி அணையில் இருந்து ஓசூர் பகுதியில் அமைந் துள்ள தொழிற் சாலை களின் நீர்தேவையை பூர்த்தி   செய்ய 20 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட சுத்திகரிப்பு ஆலை அமைக்க சிப்காட் நிறுவனம் உத்தேசித் துள்ளது.

சிறுசேரி சிப்காட் தக வல் தொழில்நுட்ப பூங்கா வில் 50 ஆயிரம் சதுரஅடி கட்டு மானத்துடன் வர்த் தக வசதி மய்யத்தை இம் மாதத்தில் அமைத்து தொடக்கி வைக்க திட்ட மிடப்பட்டுள்ளது.

விழுப் புரம், தூத்துக்குடி, வேலூர், திருப்பூரில் சிறிய டைடல் பூங்காக் களை டைடல் நிறுவனம் அமைக்க உள் ளது.

மற்ற நகரங் களுக்கும் இந்தத் திட்டம் விரிவாக்கப் படும். தற்போது பயன்பாட் டில் உள்ள அரசு சிமெண்ட் வணிகப் பெயருடன் வலிமை என்ற புதிய வணிகப் பெயர் கொண்ட சிமெண்டை இந்த ஆண்டு வெளிச்சந்தையில் அறி முகம் செய்ய டான் செம் நிறுவனம் உத்தேசித்துள் ளது.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment