செப்.17: ‘சமூகநீதி நாள்' (பெரியார் பிறந்த நாள்) தமிழ்நாடு அரசு அறிவித்த உறுதிமொழி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 11, 2021

செப்.17: ‘சமூகநீதி நாள்' (பெரியார் பிறந்த நாள்) தமிழ்நாடு அரசு அறிவித்த உறுதிமொழி!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் -

  யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியும்

  எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன்!

  சுயமரியாதை ஆளுமைத் திறனும்-பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்!

சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்!

மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும்!

சமூகநீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்!”

No comments:

Post a Comment