சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
சென்னை,செப்.2- மாற்றுத் திறனாளிகள் நலத் துறையால் செயல்படுத்தப்படும் திட் டங்கள் மாற்றுத் திறனாளிகள் அனைவரையும் சென்றடையும் வகையிலும், துறையின் நடவடிக்கைகளை வட்டார மற்றும் உள்ளூர் அளவில் விரிவுபடுத்தும் நோக்கிலும் உலகிலே முதன்முறையாக உலக வங்கி நிதியுதவியுடன் ‘ரைட்ஸ்’ (RIGHTS) திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். 6 ஆண்டுகளில் ரூ.1,702 கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப் படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்தார்.
மாற்றுத் திறனாளிகள் நலத்துறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக கவனித்து வருகிறார். இந்நிலையில் சட்டப் பேரவையில் வீட்டுவசதி, மாற்றுத் திறனாளி கள் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் மீதான உறுப்பினர்களின் விவாதத்துக்கு பதில் அளித்து, சமூகநலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:
மாற்றுத் திறனாளிகள் சுயவிருப்பத்தின் அடிப்படையில் அவர்களுக்கேற்றவாறு பிரத் யேகமாக வடிவமைக்கப்பட்ட உதவி உபக ரணங்களை பெற்றுக் கொள்ள நிலையான நிதியுதவியை அரசு வழங்கும். மாற்றுத் திறனாளிபராமரிப்பு உதவித் தொகை கோரிவிண்ணப்பித்து காத்திருப்போர் பட்டியலி லுள்ள அனைவருக்கும் நடப்பாண்டு முதல் மாதாந்திர உதவித் தொகையை வழங்குவதற் கான நிதி ரூ.404 கோடியே 64 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
உதவி உபகரணங்கள் கோரி விண்ணப் பித்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள அனைவருக்கும் உதவி உபகரணங்கள் வழங்க 2021-2022ஆம் ஆண்டுக்கு ரூ.62 கோடியே 50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அனைத்து அரசுத் துறைகள் மற்றும் 20 பேருக்கு மேல் பணியாற்றும் தனியார் நிறுவ னங்களில் மாற்றுத் திறனாளிகள் பணிபுரிய தகுதியான பணியிடங்களைக் கண்டறிதல் மற்றும் அனைத்து இடங்களிலும் தடையற்ற சூழலை உருவாக்க ‘சம வாய்ப்புக் கொள்கை’ உருவாக்கப்படும்.
ஒன்றிய அரசின் ‘சங்கல்ப்’ திட்டத்தில் பெறப்பட்ட நிதியுதவி மூலம் வேலைவாய்ப்பு மற்றும்வாழ்வாதாரம் மய்யம் உருவாக்கப் பட்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் வழியாக வேலைவாய்ப்பு நாடும் மாற்றுத் திறனாளிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களுக்கான வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.
மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்யேக தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டதுடன், அவர்களது இருப்பிடங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை 1,74,369 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
துறையால் செயல்படுத்தப்படும் திட் டங்கள் அனைத்தும் மாற்றுத் திறனாளிகள் அனைவரையும் சென்றடையும் வகையில் துறையின் நடவடிக்கைகளை வட்டார மற்றும் உள்ளூர் அளவில் விரிவுபடுத்தும் நோக்கில் உலகிலேயே முதன்முறையாக உலக வங்கி நிதியுதவியுடன் ‘ரைட்ஸ்’ (RIGHTS) திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் 6 ஆண்டுகளில் ரூ.1,702 கோடியில் செயல் படுத்தப்படும்.
இவ்வாறு அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்தார்.
No comments:
Post a Comment