சென்னை, செப்.8- முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் வரும் 15ஆம் தேதி தி.மு.க. முப்பெரும் விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தி.மு.க. வெளியிட்ட செய்திக் குறிப்பில், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக முப்பெரும் விழா , 15-9-2021 புதன்கிழமை, மாலை 5.00 மணியளவில், காணொலி காட்சி வாயிலாக சென்னை, கலைஞர் அரங்கத்தில் நடைபெறும்.
அப்போது, மாவட்டக் கழகச் செயலாளர்கள் / பொறுப் பாளர்கள், தத்தமது மாவட்டத்திற்குட்பட்ட இடத்தில் விழா வினை காணொலி காட்சி வாயிலாக காணும் வகையில் உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல் மின்நிலையத்திலும்
71 ஆயிரம் டன் நிலக்கரி காணவில்லை
சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
சென்னை,செப்.8-தமிழ்நாடு சட்டபேரவையில் நேற்று (7.9.2021) நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்திற்கு பிறகு, மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பதில் அளித்து பேசிய தாவது:-
தமிழ்நாட்டில் 3 கோடியே 16 லட்சம் மின் இணைப்புகள் உள் ளன. விவசாயத்திற்கு 22 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. கடந்த ஆட்சி காலத்தில் 2 லட்சத்து 10 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதாக கூறி, 1 லட்சத்து 35 ஆயிரம் மின் இணைப்பு கள்தான் வழங்கப்பட்டு உள்ளது. கடந்த ஆட்சியில் மின் மிகை மாநிலமாக இருந்த தாக சொல்பவர்கள் ஏன் விவ சாயத்திற்கு மின் இணைப்பு வழங்கவில்லை. மின் வாரியத் திற்கு சொந்தமான அனல் மின் நிலையங்களில் கடந்த 10 ஆண்டுகளில் மின் திட்டப் பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வில்லை. 58 சதவீதம் அள வுக்கு மின் உற்பத்தி குறைந்து உள்ளது.
2008ஆம் ஆண்டு போடப்பட்ட திட்டங்களில் 2013ஆம் ஆண்டுதான் மின் உற்பத்தி தொடங்கப்பட்டு உள்ளது. அதிலும், 43 சதவீதம் அளவுக்குத்தான் மின் உற்பத்தி நடக்கிறது. தனியாரிடம் இருந்து மின் கொள்முதல் செய்வ தற்காக இதுபோன்று செய்தார்களா? என்று தெரிய வில்லை. வரும் ஆண்டில் மின் வாரியத்திற்கு சொந்தமான அனல் மின் நிலையங்களில் 58 சதவீதம் மின் உற்பத்தியை அதிகரித்து காட்டுவோம். அதுவே எங்கள் இலக்கு. கடந்த 10 ஆண்டுகளில் ரூ.1,200 கோடியிலான மின் திட்டங்கள் முடிக்கப்படவில்லை.
தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்க ஏன் 25 ஆண்டு கள் ஒப்பந்தம் போட்டார்கள். அதுவரை நம்மால் மின் உற்பத்தியை அதிகரிக்க முடியாதா?. ஒரு யூனிட் ரூ.7.10-க்கு வாங்கப்பட்ட சூரிய மின்சக்தியை, இப்போது ஆயிரம் மெகாவாட் ஒரு யூனிட்டுக்கு ரூ.2.61 என்ற விலையில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியாரிடம் இருந்து கூடுதல் விலைக்கு மின்கொள்முதல் செய்வதால்தான் மின் வாரியத்திற்கு இழப்பு ஏற்படுகிறது. மின் துறை என்பது சேவை துறைதான். அதற்காக, இவ் வளவு அதிகமான விலையில் மின் கொள்முதல் செய்வதா?. எனவே, வருங்காலங்களில் மின் துறையில் செலவினங் களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மின்வாரிய கடன் ரூ.1 லட்சத்து 59 ஆயிரம் கோடியாக உள்ளது. தமிழ்நாடு அரசின் கடனில் 3இல் ஒரு பங்கு இதுவாகும். ஆண்டுக்கு வட்டியாக மட்டும் ரூ.16 ஆயிரம் கோடி செலுத்தப்படுகிறது. வரும் காலங்களில் நிர்வாக சீர்கேடு சரிசெய்யப்படும். மின்சாரம் தொடர்பான புகார் களை பெற மின்னகம் தொடங்கப்பட்டது. அதில் பெறப் பட்ட புகார்களுக்கு 97 சதவீதம் தீர்வு காணப்பட்டுள்ளது. வடசென்னை அனல் மின் நிலையத்தில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 485 டன் நிலக்கரி காணவில்லை. அதாவது, பதிவேட்டில் உள்ளது, இருப்பில் இல்லை.
அன்று மாலையே பேட்டியளித்த முன்னாள் மின் துறை அமைச்சர் தங்கமணி, நிலக்கரி காணாமல் போனது குறித்து விசாரிக்க அப்போதே குழு அமைக்கப்பட்டதாக கூறினார். எந்த குழு அமைக்கப்பட்டது. 2 அய்.ஏ.எஸ். அதிகாரிகளை அனுப்பியதாக சொல்கிறார். அந்த குழுவின் விசாரணை அறிக்கை எங்கே?. தூத்துக்குடி அனல் மின் நிலையத்திலும் 71,857 டன் நிலக்கரியை காணவில்லை. அங்கேயும் பதி வேட்டில் உள்ளது. இருப்பில் இல்லை. எனவே, தவறு எங்கு ஏற்பட்டது? எத்தனை ஆண்டுகளாக நடந்தது? என்பது குறித்து விசாரணை நடக்கிறது. ஆய்வு அறிக்கை வந்த வுடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
இணையம் மூலம் மது விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக இங்கே தெரிவித்தார்கள். அப்படி எந்த எண்ணமும் அரசுக்கு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment