மேட்டுப்பாளையம், செப்.3 மேட்டுப் பாளையம் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் 29.8.2021 ஞாயிறு காலை காலை10.30 மணிக்கு மேட்டூர் முருகேசன் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.
திராவிடர் கழகத்தின் காப்பாளர் சாலை வேம்பு சுப்பையன் தலைமை தாங்கினார். பாசமலர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். மேட்டுப்பாளையம் மாவட்ட தலைவர் சு.வேலுச்சாமி, மாவட்ட செயலாளர் காசு ரங்கசாமி ஆகியோர் கலந்துரையாடல் கூட் டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
தொடர்ந்து தந்தை பெரியார் அவர்களின் 143 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து கலந்துரை யாடலில் பங்கேற்ற பா.பாலசுப்பிரமணியம், வி.செல்வராஜ், மாவட்ட மாணவர் கழகத் தோழர்கள் ரா.அறிவுமணி, மு.வீரமணி, மு.பிரபாகரன், ரா.முருகேசன், எம்.கே.தியாக ராஜன், மாவட்ட மகளிரணி அம்சவேணி மற்றும் தீபலட்சுமி, ரேணுகாதேவி, வி.சீதா லட்சுமி, கே சஞ்சய், என் விக்னேஷ்குமார், கே தனுஷ், பாலசுப்பிரமணியம், சி.ரங்கசாமி,
சு.முரு கேசன், கோ.க.மணி, லியாக்கத் அலி, சே.தமிழ் மணி, எம்.திருக்குமரன், க.தமிழ்ச் செல் வன், திமுக குணசேகரன் உள்ளிட்ட வர்கள் கலந்துரையாடலில் பங்கேற்று கருத்துரை வழங்கினார்கள். நிறைவாக காரமடை ஒன்றிய தலைவர் அ.மு.ராஜா நன்றியுரையாற்றினார்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது
1. தந்தை பெரியார் அவர்கள் 143 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை எழுச்சியுடன் கொண்டாடும் வகையில் காரமடை ஒன்றியம் மற்றும் கிளை கழகங்களில் கழக கொடியேற்றி சிறப்பாக கொண்டாடுவதையும், இறுதியாக மேட்டுப்பாளையத்தில் பேருந்து நிலையம் அருகில் கழகக் கொடியேற்றி சிறப்பாக பிறந்த நாள் விழாவை கொண்டாடுவது என முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
2..கழகத்தில் அதிகமான புதிய இளைஞர் களையும் மாணவர்களையும் சேர்க்கும் பணியை தீவிரப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
3.மேட்டுப்பாளையம் நகரில் தந்தை பெரியாரின் சிலையை நிறுவ தொடர்ந்து தீவிர முயற்சி எடுப்பது என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
4. காரமடை மேம்பாலத்திற்கு தந்தை பெரியாரின் பெயரை சூட்ட வேண்டும் என தமிழ் நாடு முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
5. நூலகங்களில் விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, மாடர்ன் ரேசனலிஸ்ட் ஆகிய இதழ்களை இடம்பெறச் செய்ய வேண்டுமாய் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment