1,349 நிறுவனங்களின் சொத்துகள் விற்பனை இந்திய திவால் வாரியம் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 10, 2021

1,349 நிறுவனங்களின் சொத்துகள் விற்பனை இந்திய திவால் வாரியம் அறிவிப்பு

புதுடில்லி, செப்.10 கடந்த, ஜூன் நிலவரப்படி, திவால் சட்டத்தின் கீழ், 1,349 நிறுவனங்களின் சொத்துக்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளதாக, இந்திய திவால் வாரியம் தெரிவித்துள்ளது.

திவால் சட்டத்தின் கீழ், வங்கிக் கடனை திரும்பத் தராத நிறுவ னங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதன் படி, நலிவில் இருந்து மீளும் வாய்ப் புள்ள நிறு வனங்களாக இருக்கும் பட்சத்தில் அவற்றின் கடன்கள் மறு சீரமைக்கப் பட்டு,  நிர்வாக உரிமம் கைமாற்றப் படுகிறது. அவ்வாறின்றி, மீட்சி காண வாய்ப்பற்ற நிறு வனங்களின் சொத்து களை விற்பனை செய்து கடன் வசூலிக்கப் படு கிறது.

இந்த வகையில், புதிய திவால் சட்டம் அறிமுக மான அய்ந்து ஆண்டு களில் 4,541 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது.

அவற்றில், கடந்த ஜூன் நிலவரப்படி 2,859 நிறுவனங்கள் மீதான நடவடிக்கை முடிவடைந் துள்ளது.

1,349 நிறுவனங்களின் சொத்துகளை விற்பனை செய்து, கடனை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.

396 நிறுவனங்களின் கடன் மறுசீரமைப்பு பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திவால் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாகவே, பெரும்பாலான நிறுவனங் களின் சொத்து மதிப்பு அடியோடு குறைந் துள்ளது.

நிலுவையில் உள்ள கடனில், சராசரியாக 7 சதவீத அளவிற்கே, திவால் நிறுவனங்களின் சொத் துக்கள் உள்ளதாக, இந்திய திவால் வாரியம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் நிலவரப் படி, திவால் சட்டத்தின் கீழ் கோரப் பட்ட கடன் நிலுவையில், 36 சதவீத அளவிற்கே, நிதி நிறு வனங்களுக்கு திரும்பக் கிடைத்துள்ளது.

அதில், 1 கோடி ரூபாய்க்கும் குறைவான வாராக் கடன் 80 சத வீதமாக உள்ளது.

இதுபோல, குறைந்த கடனுக்காக திவால் நடவடிக்கை எடுப்பதில் நிதி நிறுவனங்களுக்கு ஆர் வம் குறைந்து வரு

கிறது.

அதிக வாராக் கடன் உள்ள நிறுவனங்கள் மீது, திவால் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவே, நிதி நிறுவனங்கள் விரும் புவதாக, புள்ளி விபரம் தெரிவிக்கிறது.  

No comments:

Post a Comment