தமிழ்நாடு முழுவதும் 12ஆம் தேதி 43 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 8, 2021

தமிழ்நாடு முழுவதும் 12ஆம் தேதி 43 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்

சென்னை, செப்.8 தமிழ்நாடு முழுவதும் 43 ஆயிரத்து 51 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் வருகிற 12ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறை களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

கரோனா நோய்த் தடுப்பில் தடுப்பூசி தான் பெரிய அளவில் பங்காற் றுகிறது. அந்தவகையில் தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 18 வயதுக்கு மேற்பட்ட 6 கோடியே 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத் தும் முயற்சியில் அரசு தீவிரமாக ஈடுபடுகிறது.கடந்த 30ஆம் தேதியில் இருந்து நாளொன்றுக்கு 5 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகி றது. இதன் மூலம் கடந்த 5ஆம் தேதி வரை 3 கோடியே 31 லட்சத்து 85 ஆயிரத்து 824 பேர் (முதல் மற்றும் 2ஆம் தவணை சேர்த்து) பயன் அடைந்து இருக்கின்ற னர். இந்த நிலையில் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் ஒரு புதிய மைல்கல்லை எட்டும் வகையில், மெகா கரோனா தடுப்பூசி முகாம்வருகிற 12ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) ஒரு நாள் மட்டும் நடத்த அரசு முடிவு செய் துள்ளது.

மெகா தடுப்பூசி முகாம்

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் வழக்கமாக தடுப்பூசி செலுத்தப்படும் 40 ஆயிரத்து 399 இடங் களுடன், கூடுதலாக 2 ஆயிரத்து 652 இடங்கள் சேர்த்து மொத்தம் 43 ஆயிரத்து 51 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. கூடுதலாக சேர்க்கப்படும் இடங்கள் இதுவரை தடுப் பூசி செலுத்தப்படாத இடங்களில் அமைக்கப் படுவதை உறுதி செய்ய வும் அறிவு றுத்தப்பட்டுள் ளது.18 வயதுக்கு மேற் பட்டவர்களில் தடுப்பூசி போடாமல் விடுபட்ட வர்கள் பயன்பெறும் வகையில் இந்த தடுப்பூசி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

ஒரு முகாமில் 4 பேர்

* ஒரு தடுப்பூசி முகா மில் தடுப்பூசி செலுத்த வும், அதனை பதிவு செய் யவும் தலா ஒருவர், 2 அங்கன்வாடி ஊழியர் கள் என மொத்தம் 4 பேரை நியமிக்க வேண் டும். தடுப்பூசி செலுத்தும் பணியில் நர்சுகளும், அதனை பதிவு செய்யும் பணியில் ஆசிரியர்கள், பொது சேவை மய்ய பணியாளர்களும் நியமிக் கப்படலாம். அதேபோல், கூட்டம் அதிகம் உள்ள பகுதியில் டோக்கன் வழங்கும் பணிகளுக்கு வருவாய்த்துறை, உணவு பொருள் வழங்கல் துறை போன்ற துறை பணியா ளர்களையும் ஈடுபடுத் தலாம்.

* தடுப்பூசி செலுத்தும் இடங்களில் சாமியானா பந்தல், இருக்கைகள், குடி நீர் வசதி செய்து கொடுக் கப்பட வேண்டும். அந்த பகுதி காவல் நிலையத்தில் இருந்து பாதுகாப்பு பணிக்காக காவல்துறையினரை நியமித்து, பய னாளர்களை வரிசையில் நிற்க செய்யவேண்டும்.

காலை 7 மணி முதல்

இரவு 7 மணி வரை

* ஒரு மேற்பார்வை யாளர் தடுப்பூசி செலுத் தும் 5 முதல் 8 இடங்களை பார்வையிட வேண்டும்.

* இந்த மெகா தடுப்பூசி முகாம் நடப்பது குறித்த பிரச்சாரம் அனைத்துப் பகுதிகளிலும் செய்யப் பட வேண்டும்.

* மெகா தடுப்பூசி முகாம் நடக்கும் நாளில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப் பூசி செலுத்தப்பட வேண் டும் என்பது உள்பட பல் வேறு வழிகாட்டு நெறி முறைகள் வெளியிடப் பட்டுள்ளன.

No comments:

Post a Comment