மலேசிய திராவிடர் கழக முதுபெரும் கழக வீரர் முனியாண்டி 100 வயது கண்ட பெருந்தகையாளர் மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 2, 2021

மலேசிய திராவிடர் கழக முதுபெரும் கழக வீரர் முனியாண்டி 100 வயது கண்ட பெருந்தகையாளர் மறைவு

கழகத் தலைவர்   வீர வணக்கம்!

மலேசிய திராவிடர் கழகத்தின் பினாங்கு கிளையை வளர்த்த முன்னோடிகளில் ஒருவரான முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் அய்யா மானமிகு ஆவன. முனியாண்டி அவர்கள் தனது 100 வயதில் நீண்ட காலம் கொள்கை வாழ்வு வாழ்ந்து நேற்று (1.9.2021) முதுமையின் காரணமாக மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயருறுகிறோம்.

நூற்றாண்டு நாயகரான அய்யா ஆவன. முனியாண்டி அவர்கள் பல பொறுப்புகளை பினாங்கு கிளையில் வகித்தவர். மறைந்தும் மறையாத பினாங்கு மாநில .தி..வின் முன்னோடிகளான பி.சி. இராமய்யா சமரசம் அப்பாதுரை, பினாங்கு பண்டிதர், சுல்தான், ஜமாலுதீன், பி.சி. குமரகுரு, சி.. களஞ்சியம், சி.. முனியாண்டி, சோ. மருதமுத்து, வெ. அர்ச்சுனன் போன்றவர்களும் தொண்டறம் புரிந்த கிளை பினாங்கு மாநிலக் கிளையாகும். (மேற்சொன்ன பட்டியலில் உள்ள பலரை நான் நன்கறிவேன்; அக்காலத்தில் -
புகைப்படமும்
என்னுடன் அவர்கள் 1968இல் எடுத்துள்ளனர். பிறகும் பல முறை சென்றபோதும் பழகியுள்ளனர்).

சொந்தக் கட்டடம் கழகத்திற்குத் தேவை என தேசியத் தலைவர் திருச்சுடர் கே.ஆர். இராமசாமி கூறிய கருத்தை வழிமொழிந்து வரவேற்று சொந்த நிதியை வழங்கி முன்னுதாரணமாகத் திகழ்ந்த கட்டுப்பாடு மிக்க லட்சிய வீரர் ஆவன. முனியாண்டி அவர்கள்.

அவரது மறைவால் வருந்தும் அவரது குடும்பத்தவர் குறிப்பாக தோழர் மு. சந்திரசேகரன் (பண்டராய .தி.. கிளை செயலவை உறுப்பினர்), கழகத் தலைவர் அண்ணாமலை மற்றும் பொறுப்பாளர்கள் அனை வருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும்.

 நிறை வாழ்வு வாழ்ந்த கொள்கைக் கோமானுக்கு நமது வீர வணக்கம்!

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம் 

சென்னை       

2-9-2021              

No comments:

Post a Comment