எனது ஆசை 10.01.1948 - குடிஅரசிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 11, 2021

எனது ஆசை 10.01.1948 - குடிஅரசிலிருந்து...

மாநாட்டுக்கு தலைமை வகித்த தோழர் அவர்கள், தான் ஒரு சின்னப் பையன் என்றும், தன்னைத் தலைமைப் பதவியில் உட்காரவைத்து நான் வேடிக்கை செய்கிறேன் என்றும் சொன்னார். இந்த இயக்கம் இன்று ஏதாவது மதிக்கத் தகுந்த அளவுக்கு பயன்பட்டு வருகின்றது என்று சொல்லப்படுமானால் அதற்குக் காரணம் இந்த மாதிரி சின்னப் பையன்களே காரணமாகும். இப்படிப்பட்ட சின்னப் பையன்கள் இந்த இயக்கத் தில் இருப்பதினாலேயேதான் எனக்கும் ஒருபுறம் வயது வளர்ந்தாலும், வாலிபமும் கூடவே வளர்ந்து வருகிறது. எனது சகவாசம் முழுவதும் சின்னப்பையன்களிடமே இருப்ப தினால்தான் சின்னப்பையன் தன்மை எனக்கு இன்னமும் இருந்தும், வளர்ந்தும் வளர் கிறது. என் ஆசையெல்லாம் நான் எப்பொழுதும் சின்னப்பையன்கள் மாதிரியே இருக்க வேண்டுமென்பதோடு, பெரிய ஆள்கள் மாதிரி ஆகக்கூடாது என்பதுமாகும்.

No comments:

Post a Comment