வாசிங்டன், செப். 2- அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டும் நிலையில் மொத்த கரோனா பாதிப்பு 4 கோடியை நெருங்குகிறது.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,19,642 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 569 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் இதுவரை 3.9 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3.0 கோடி பேர் குணமடைந்துள்ளனர். 6, 56,393 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் அதிகபட்சமாக கலிபோர்னியாவில் 43 லட்சமும், டெக்சாஸில் 35 லட்ச பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கடந்த சில நாட் களாகவே 1 லட்சத்துக் கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவில் இதுவரை 52 விழுக்காடு பேருக்கு முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment