கோவில்பட்டி, ஆக.2 கோவில் பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத் தில் திரவ ஆக்சிஜன் உற்பத்தியை மக்களவை உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்தார்.
பின்னர் மக்களவை உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜகவினர் எப்போ துமே ஒவ்வொரு விஷயத்திலும் பல நிலைப்பாடு எடுக்கக்கூடியவர்கள். பெகாசஸ் என்பது மிகப்பெரிய பிரச்சினை. வெளியே எந்தப் பிரச் சினையையும் நாங்கள் விவா திக்கத் தயாராக இருக்கிறோம் என்று சொல்லக்கூடிய பாஜக அரசு, நாடாளுமன்றத்துக்குள் அதனை விவாதிக்கத் தயாராக இல்லை.
இது நாட்டுடைய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினை. இதற்கு உள்துறை அமைச்சர் பதில் அளிக்க வேண்டும். அதற்கு கூட அவர்கள் தயாராக இல்லை. வெளியே ஒன் றும், உள்ளே ஒன்றும் என ஒவ் வொரு இடத்துக்கும் ஏற்றாற்போல் ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு நிலைப் பாடு எடுப்பதால் தான் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மாநில உரிமை குறித்து....
இதே பிரதமர், குஜராத்தில் முதல்வராக இருந்தபோது மாநில உரிமைகள் குறித்து பேசினார். ஆனால், இன்று ஒவ்வொரு மசோ தாவிலும் மாநில உரிமைகள் பறிக் கப்படுகிறது. இதுதான் அவர்களின் உண்மையான முகம்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிகப்பெரிய அளவில் வருத்தத்தில் உள்ளோம். ஏனென்றால் கரோனா தொற்று குறித்து பேச வேண்டிய நிலை உள்ளது.
விவசாயிகளுக்கு எதிராக ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து ஓராண்டுக்கு மேலாகப் போராடி வருகின்றனர்.
நாட்டின் பாதுகாப்பு
அந்த மசோதா குறித்து விவா திக்கக் கூறியுள்ளோம். விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதம் வேண்டும் என கேட்கிறோம். ஆனால், எல்லா வற்றையும் விட மிக முக்கியமானது பத்திரிகையாளர்களின் அலை பேசி பேச்சுக்கள் ஒட்டுக் கேட்கப் பட்டுள்ளது. யாரை வேண்டுமானா லும் அரசு நினைத்தால், அவர்களது மடிக்கணினி, கணினி அல்லது அலைபேசி ஆகியவற்றில் எதை வேண்டுமானாலும் கொண்டு வந்து வைத்து, அவர்களை குற்றவாளி களாக அறிவித்து தண்டனை கொடுக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய பிரச்சினை இது.
ஏன் விவாதிக்க தயங்குகிறது
யாருக்குமே பாதுகாப்பு இல்லை. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், அரசாங்கத்தை எதிர்த்து கேள்வி கேட்டால் இதே நிலை தான். சமூக செயற்பாட்டாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், அரசியலில் இருக்கக்கூடியவர்கள் என யாருக் குமே பாதுகாப்பு இல்லாத சூழ் நிலை இருக்கும்போது, அதனைப் பற்றி அரசாங்கம் ஏன் விவாதிக்க தயங்குகிறது. தயாராக இல்லை என்று ஏன் சொல்கிறது.
இதனை விவாதிக்கக் கோரி அனைத்துக் கட்சி தலைவர்களும் ஒட்டு மொத்தமாக கையெழுத்திட் டுக் கொடுத்துள்ளோம். ஆனால், அதனை எடுத்து அவர்கள் விவாதிக் கத் தயாராக இல்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் வேறு எந்த விவாதத் துக்கான வாய்ப்பும் இல்லை. அத னால் தவறு என்பது அரசாங்கத்தின் மேல் தான் உள்ளது. அவர்கள், அனைத்து எதிர்கட்சித் தலைவர் களையும் அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும். அதை செய்யக்கூட அவர்கள் தயாராக இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment