சென்னை மாநகராட்சி ஆணையர் பேட்டி
சென்னை, ஆக.2 கரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக மெரினா உள்ளிட்ட கடற் கரைக்கு செல்ல அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி ஆணையர் பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் கரோனா 2ஆவது அலையின் தீவிரம் கடந்த சில வாரங்களாக குறைந்து இருந்தது. எனினும், கரோனா 3ஆவது அலைக்கான சாத்தியம் உள்ளது என நிபுணர்களின் எச்சரிக்கையை முன்னிட்டு தடுப்பு நடவடிக்கைகளில் அரசு இறங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, சென்னையில் மெரினா உள்ளிட்ட கடற்கரைக்கு செல்ல காவல்துறையினர் அனுமதி அளிக்கமாட்டார்கள் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். திருமணங்களில் சாப்பிடும் போதும் தனிமனித இடைவெளி பின்பற்றப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment