தாய்ப்பாலுக்கு நிகராக கழுதைப்பாலா மகாராட்டிர அரசு ஆய்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 14, 2021

தாய்ப்பாலுக்கு நிகராக கழுதைப்பாலா மகாராட்டிர அரசு ஆய்வு

பெரும் வயிற்றுப் பிரச்சினை உள்ள குழந்தைகளுக்கு கழுதைப் பால் கொடுக் கும் வழக்கம் உள்ளது. கழுதைப்பாலுக்கான தேவை இப்போது மகாராட்டிரா மாநிலத் தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலை யில், கடந்த ஆண்டு 5000 ரூபாய் விற்ற ஒரு லிட்டர் பாலின் விலை இப்போது ரூ.10,000 என்று இரு மடங்காக உயர்ந்திருக்கிறது.

பசும் பால், ஆட்டுப் பால் என்று மற்ற கால்நடைகளின் பாலில் இல்லாத அளவு வயிற்றுக்கு இதமளிக்கும் லாக்டோபேசில் லஸ் கழுதைப் பாலில் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மகாராட்டிராவின் கால்நடை வளர்ச்சி துறையைச் சேர்ந்த மருத்துவ அதிகாரி ஒருவர் கூறுகையில், இதய நோய்கள், தொற்று நோய்கள், கல்லீரல் தொடர்பான நோய்கள், காய்ச்சல் மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்த கழுதைப் பால் பயன்படுத்தப் படுவதாக கூறினார்.

தாய்ப்பாலுக்கு நிகராகக் கருதப்படும் இந்தப் பாலில் மற்ற பாலை விட 80 சதவீதம் அளவுக்கு லாக்டிக் ஆசிட் பாக்டீரியா இருப்பதாகக் கூறப்படுகிறது.

கழுதைப் பால் உற்பத்தி மிகவும் குறைவான அளவே உள்ளதாலும், இதன் பயன்கள் கருதி பயன்பாடு அதிகரித்திருப் பதாலும் 10 மில்லி லிட்டர் அளவு பால்

ரூ. 100 க்கு விற்கப்படுகிறது.

இந்தியாவில் இந்தப் பாலின் பயன்பாடு அதிகம் இல்லை என்றபோதும், அய்ரோப் பிய நாடுகளில் குறிப்பாக இத்தாலியில் இதை உலர் பால் பவுடராக குழந்தைகளுக் கான உணவுப் பொருட்கள் மற்றும் மருத் துவ உணவுகளில் சேர்க்கப் படுகிறது.

மேலும், கழுதைப் பால் மிகச் சிறந்த சருமப் பாதுகாப்பு அம்சம் நிறைந்ததாகக் கூறப்படுகிறது, சாக்லேட் மற்றும் அழகு சாதனப் பொருட்களிலும் இதைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

இருந்தபோதும், கழுதைப் பாலை குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் நேரடியாகப் புகட்டுவது குறித்து மருத்து வர்களின் முறையான வழிகாட்டுதல் அவ சியம் என்றும் கூறுகின்றனர்

No comments:

Post a Comment