உயர் கல்வியில் மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க, ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 11, 2021

உயர் கல்வியில் மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க, ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா?

மக்களவையில் எஸ்.ஜெகத்ரட்சகன் கேள்வி!

சென்னை ஆக.11- திராவிட முன்னேற்றக் கழக அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர், டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன் 9.8.2021 அன்று, மக்களவையில், குழுக் கல்வி முறையை வளர்த் தெடுக்க, திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மேற் கொள்ளபட்டனவா? என்றும், தேசியக் கல்விக் கொள்கையில், உயர் கல்வியில் மாண வர்களின் சேர்க்கை விகிதத்தை, வரும் 2035ஆம் ஆண்டிற் குள் அதிகரிக்க, ஏதேனும் நடவடிக் கைகள் திட்டமிடப் பட்டுள்ளனவா? என்றும், ஒன்றிய கல்வித்துறை அமைச்சர், தர்மேந்திர பிரதானிடம், விரிவான கேள்வியை எழுப்பினார்.

ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் அளித்த பதில் வருமாறு:-  குழுக் கல்வி முறையை, கூகுள் போன்ற செயலிகள் மூலம், வளர்த் தெடுக்க, 25,000க்கும் அதிகமான பேராசியர் களுக்கு உரிய திறன் மேம் பாட்டு பயிற்சி அளிக் கப்பட்டு, வகுப் பறைகளில் பயன் படுத்தும் வகையில் ஆவன செய்யப் பட்டுள் ளது என்றும், வருகின்ற 2035ஆம் ஆண்டிற்குள் மாணவர் களின் சேர்க்கை விகிதத்தை, உயர் கல்வியில் 50 விழுக்காட்டை அடையும் வகையில், திறந்தவெளி, தொலைத் தொடர்பு மற்றும் இணைய வழி கல்வி முறையை ஊக்கப்படுத் தும் நோக்கத்துடன், ஒன்றிய அரசின் பல் கலைக்கழக மானியக் குழு உரிய முறைகளை வகுத் துள்ளது என்றும், அனைத்து இந்திய தொழில் கல்வி குழுமம் (ICTE) வாயிலாகவும் உரிய கொள்கை முடிவு கள் எடுக்கப்பட்டு, இவ்விதிமுறைகள் அனைத் தும் இணையத்தில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment