தஞ்சாவூர் - பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் - பெரியார் உயராய்வு சிந்தனை மய்யத்தின் சார்பில் காணொலி மூலம் தமிழ்நாடு தழுவிய அளவில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி வகுப்புகளில் பங்கு பெற்ற இருபால் மாணவர் களுக்கும் நடத்தப்பட்ட போட்டி தேர்வில் முதல், இரண்டாம் பரிசு பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று (10.8.2021) மாலை 4.30 மணி அளவில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறு வனத்தின் வளாகத்தில் பல்கலைக் கழகத்தின் வேந்தரும், திராவிடர் கழகத் தலைவருமான கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் இயக்குநர் பேராசிரியர் நம்.சீனிவாசன் வரவேற்புரையாற்றினார்.
தங்கள் பிள்ளைகள் பரிசு பெறும் காட்சி கண்டு பெற்றோர்கள் பெறும் மகிழ்ச்சிக்கோர் அளவில்லை.
பரிசு பெறுவது சிறப்புதான் - அதைவிட பெருஞ்சிறப்பு அதனைத் தக்க வைத்துக் கொள்வதுதான் - அதற்கு முயற்சியும், முனைப்பும் தேவை என்று கூறிய பேராசிரியர் நம்.சீனிவாசன், மாணவர்களுக்கு முன் மாதிரியாக இருக்கக் கூடியவர் நமது வேந்தர் ஆசிரியர் வீரமணி அவர்கள்தான் என்றும் கூறினார்.
விழாவின் நோக்கவுரையை பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினரும், திராவிடர் கழகப் பொதுச் செயலாளருமான வீ.அன்புராஜ் வழங்கினார்.
காணொலி வழி 1849 இருபால் மாணவர்கள் பயிற்சி பெற்றது, போட்டித் தேர்வில் 879 பேர் பங்கேற்றது, 48 ஆசிரியர்கள் வகுப்புகளை நடத்தியது, வகுப்புகள் எடுக்கப்பட்ட நேரம் 350 மணிநேரம் - முதல், இரண்டாம் பரிசுகளுக்கான நன்கொடையை பெரியார் பன்னாட்டு அமைப்பு அளித்த தொகை ரூ.5,70,000 ஆகிய அரும் தகவல்களைக் கூறினார். (பயிற்சி வகுப்பில் தேர்வு எழுதியோர் பட்டியல் 5ஆம் பக்கம் காண்க.). 3ஆம் பரிசு சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் அளிக்கப்படும்.
பரிசு பெற்ற மாணவர்கள் சார்பில் புதுச்சேரி சரவணன், பொள்ளாச்சி வில்சன், தென்காசி சத்திய பிரியா, திருச்சி போமிதா, தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர், மூத்த வழக்குரைஞர் அமர்சிங், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநிலக் கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன், (பெரியார் குரலில்) டாக்டர் சரோஜா ஆகியோர் உரைகளுக்குப் பின் பரிசளிப்பு விழாவிற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் பரிசுகளையும் சான்றிதழ் களையும் அளித்து பாராட்டுரை, வாழ்த்துரை வழங் கினார். (முழு உரை நாளை).
தம் வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சியமான திருநாள் என்று பரிசளிப்பு உரையில் குறிப்பிட்டார்.
திராவிடர் கழக மகளிரணி மாநில செயலாளர் தகடூர் தமிழ்ச் செல்வி நன்றி கூற, மாலை 6.30 மணிக்கு விழா நிறைவுற்றது.
மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் விருந் தளித்து உபசரிக்கப்பட்டது.
No comments:
Post a Comment