கோவை, ஆக. 10 - கோவை தமிழ் நாடு பெரியார் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் நல சங்கத்தின் புதிய நிர்வாகிகள் கமிட்டிக் கூட்டம் கோவை சுந்தராபும் அருகில் காம ராஜர் நகர் கண்ணப்பன் அரங்கில் 8.8.2021 மாலை 4 மணி அளவில் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ம.சந்திரசேகர் அவர்கள் தலைமை யில் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் தி.க. செந்தில்நாதன், மாவட்ட அமைப் பாளர் மு.தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்து கழகப் பொறுப் பாளர்கள் அனைவரும் கருத்துரை வழங்கினர்.
தொடர்ந்து மாநகர தலைவர் புலியகுளம் க.வீரமணி, குனியமுத் தூர் பகுதி கழகப் பொறுப்பாளர் வே.தமிழ்முரசு உள்ளிட்டோர் வாழ்த் துரையும் வழங்கி சிறப்பித்தனர்.
தொடர்ந்து புதிதாக தேர்வு செய் யப்பட்ட நலச்சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் அனை வருக்கும் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நிகழ்வில் இளைஞரணி தோழர் தி.க.வெற்றிச்செல்வன், கணேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியை சிறப்பாக தொழி லாளரணி செயலாளர் ஆர்.வெங்க டாசலம் ஒருங்கிணைத்தது குறிப் பிடத்தக்கது.
நிறைவாக கே.முத்துமாலையப் பன் நன்றியுரையாற்றினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
தீர்மானம்: 1
கோவை அமைப்பு சாரா தொழி லாளர் நல சங்கத்திற்கு புதிய நிர்வா கிகளை பரிந்துரை செய்த மாவட்ட திராவிடர் கழக நிர்வாகத்திற்கும் மாநில பொறுப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.
தீர்மானம்: 2.
தமிழ்நாடு பெரியார் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலச்சங்கம் கோவை மாவட்ட தலை வர் எஸ். ஆனந்தசாமி ,செயலாளர் ஆர். வெங்கடாச்சலம், பொருளாளர் கே.முத்துமாலையப்பன், துணைத் தலைவர் ஆனந்தராஜ் , துணை செயலாளர் எஸ். செல்வகுமார், மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக கார்த்திக், இருதயராஜ், சம்பத், முருகானந்தம், ஜெயக்குமார், வெங் கடேஷ், குரு, பொன்ராஜ், ராஜேந் திரன், காமராஜ், ராமு, ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் 3
புதியதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் ஒன்றி ணைந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கட்டு மானம் அமைப்புசாரா தொழிலாளர் கள் அந்தந்த பகுதிகளில் உள்ள நிர்வாகிகள் சந்தித்து சங்கத்திற்கு உறுப்பினர்களாக சேர்த்து நலவாரி யத்தில் பதிவு செய்து நலவாரிய சலுகைகளை பெற்றுத் தர உறுதியாக செயல்படுவோம் என தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 4
கோவை மாவட்ட நிர்வாகிகள் எந்த ஒரு சூழ்நிலையிலும் மாநில தலைமையிடம் தெரிவிக்காமல் செயல்படக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது.
தீர்மானம் 5
கோவை மாவட்டத்தில் உள்ள கழக அனைத்து தோழர்களையும் தோழியர்களையும் நலவாரியத்தில் இணைத்து பயன்பெற இச்சங்கத்தின் சார்பாக தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது.
No comments:
Post a Comment