டமாஸ்கஸ், ஆக. 9- சிரியாவின் டாரா மாகாணத்தில் சண்டைகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு போர் நிறுத்தத்திற்கு அய்க்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து அய்க்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிவிப்பில், “சிரியாவின் டாரா மாகாணத்தில் கடந்த ஒருவாரமாகவே கிளர்ச்சியாளர்களுக்கும், அரசுப் படைகளுக்கும் சண்டை நடந்து வருகிறது. சண்டை காரணமாக கடந்த மாதத்தில் 28 பேர் பலியாகி உள்ளனர். மேலும் சுமார் 18,000 பேர் தங்கள் குடியிறுப்புப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர். எனவே டாரா மாகாணத்தில் போர் நிறுத்தத்தை அறிவிக்க வலியுறுத்து கிறோம்” என்றார்.
அய்எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படை களால் மீட்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் கிளர்ச்சியா ளர்களின் பிடியில் உள்ள சில இடங்களில் சண்டை அவ்வப்போது நடந்து வருகிறது.
சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில் லட்சக் கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தனர். லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் சிரியா போரில் ஆசாத்தின் அரசுப் படைகள் அப்பாவி மக்களைக் கொன்று குவித்ததாக அமெரிக்கா உட்பட பல நாடுகள் குற்றம் சுமத்தின.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த தேர்தலில் பஷார் அல் ஆசாத் வெற்றி பெற்றிருந்தார்.
மேலும், இஸ்ரேலும் அவ்வப்போது, சிரியாவில் தாக்குதலை நடத்தி வருகிறது.
இஸ்ரேலைப் பொறுத்தவரை, மத்திய கிழக்கு நாடு களில் ஈரானைத் தங்களுக்கான அச்சுறுத்தல் கொண்ட நாடாகக் கருதுகிறது. இந்த நிலையில் சிரியாவில் ராணுவ வீரர்களை மய்யமாகக் கொண்டு இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
No comments:
Post a Comment