குத்துச்சண்டையில் லவ்லினா உறுதி செய்தார்
டோக்கியோ, ஆக. 1- 32ஆவது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் 8ஆவது நாளான 30.7.2021 அன்று இந்தியாவுக்கு தித்திப்பு நிறைந்ததாக அமைந்தது என்றால் மிகையாகாது.
குத்துச்சண்டை போட்டியில் பெண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன், முன்னாள் உலக வாகையரான சீன தைபேயின் நின் சின் சென்னுடன் மோதினார்.
ஒலிம்பிக்கில் முதல்முறையாக கால்பதித்துள்ள லவ்லினா தொடக் கம் முதலே தாக்குதல் பாணியை தொடுத்தார். அவரது சரமாரியான குத்துகளுக்கு ஈடுகொடுக்க முடி யாமல் நின் சின் சென் தடுமாறினார். 2ஆவது ரவுண்டில் நின் சின் சென் கடுமையான பதிலடி கொடுக்க முயற்சித்தார். ஆனால் தனது உயரத்தை சாதகமாக பயன்படுத்தி லவ்லினா அதனை சாதுர்யமாக சமாளித்தார். கடைசி சுற்றிலும் நின் சின் சென் மேற்கொண்ட தாக் குதல் முயற்சிக்கு பலன் கிடைக்க வில்லை. முடிவில் லவ்லினா 4--1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறினார்.
அரைஇறுதியில் லவ்லினா, 2019ஆம் ஆண்டு உலக வாகைய ரான துருக்கி வீராங்கனை பூசெனஸ் சர்மினெலியை வருகிற 4ஆம் தேதி எதிர்கொள்கிறார்.
குத்துச்சண்டையை பொறுத்த மட்டில் அரைஇறுதிக்கு முன்னே றினாலே பதக்கம் கிடைத்துவிடும். அதன்படி லவ்லினா குறைந்தது வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்து இருக்கிறார். இதன் மூலம் ஒலிம்பிக் குத்துச்சண்டை வரலாற் றில் பதக்கம் வெல்லும் 3ஆவது இந்தியர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
இதற்கு முன்பு 2008ஆம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்கில் விஜேந் தர் சிங்கும், 2012ஆம் ஆண்டு லண் டன் ஒலிம்பிக்கில் மேரிகோமும் குத்துச்சண்டையில் வெண்கலம் வென்றுள்ளனர்.
அசாமை சேர்ந்த 23 வயதான லவ்லினா உலக குத்துச்சண்டை வாகையர் பட்டப் போட்டியில் இரண்டு முறை வெண்கலம் வென் றவர் ஆவார். அதற்கு எல்லாம் முத்தாய்ப்பாக இப்போது ஒலிம் பிக்கில் பதக்கமேடையை எட்டி பரவசப்படுத்தியிருக்கிறார்.
நடப்பு டோக்கியோ ஒலிம்பிக் கில் இந்தியாவுக்கு கிடைக்கப்போ கும் இரண்டாவது பதக்கம் இது வாகும்.
ஏற்கெனவே 2ஆவது நாளில் பெண்களுக்கான பளுதூக்குதல் 49 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று சரித்திரம் படைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக்கில் முதல்முறையாக பதக்கத்தை முத்தமிடும் லவ்லினா வுக்கு பாராட்டுகள் குவிகிறது. ஒன்றிய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்குர், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீரரான அபினவ் பிந்த்ரா, இந்திய கிரிக் கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா உள்பட பலரும் சமூக வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்திய குத்துச்சண்டை சம் மேளன தலைவர் அஜய்சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்திய குத்துச்சண்டைக்கு மட்டுமின்றி அசாம் மற்றும் ஒட்டுமொத்த தேசத்துக்கும் இது பெருமைக்குரிய தருணமாகும். உண்மையிலேயே லவ்லினா மேற்கொண்ட மிகவும் தைரியமான முயற்சி இதுவாகும். அவர் கடந்த ஆண்டு கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மீண்டு வந்தார். அவரது தாயார் உடல் நலக்குறை வால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
லவ்லினா பிறவியிலேயே போராட்ட குணம் நிறைந்தவர் எனலாம். இந்த வெற்றி இந்திய குத்துச்சண்டைக்கு மிகப்பெரிய மைல்கல்லாகும். லவ்லினாவின் தொடக்கம் தான் இது. அவர் கவனமாக திட்டமிட்டு செயல் பட்டு இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வெல்ல வேண்டியது அவசியமான தாகும்’ என்று கூறியுள்ளார்.
குத்துச்சண்டையில் பெண் களுக்கான 60 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை சிம் ரன்ஜித் கவுர் 0--5 என்ற கணக்கில் தாய்லாந்தின் சுதாபோர்ன் சீசன்டீயிடம் தோல்வி கண்டு வெளியேறி னார்.
No comments:
Post a Comment