ஊரக உள்ளாட்சி தேர்தல் : தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தீவிரமாக களப் பணியில் ஈடுபட வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 9, 2021

ஊரக உள்ளாட்சி தேர்தல் : தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தீவிரமாக களப் பணியில் ஈடுபட வேண்டும்

 முதலமைச்சர் மு..ஸ்டாலின் அறிவுரை

சென்னை, ஆக.9- ஊரக உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றி பெற பாடுபடுங்கள் என்று தி.மு.. மாவட்ட செயலாளர்களுக்கு முதலமைச்சர் மு..ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஊரக உள்ளாட்சி தேர்தல்

27 மாவட்டங்களில் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் உள்பட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு தேர்தல் நடந்து முடிந்தது. மாவட்டங்கள் பிரிப்பு, வார்டு மறுவரையறை ஆகிய காரணங்களால் காஞ்சீபுரம், செங்கல் பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத் தூர், விழுப்புரம், கள்ளக்கு றிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை .

இந்தநிலையில் இந்த விடு பட்ட 9 மாவட்டங்களில் செப்டம்பர் (அடுத்த மாதம்) 15-ஆம் தேதிக்குள் தேர்தல் நடத் தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் காலக் கெடு விதித்து உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் 9 மாவட் டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண் டுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள ஆளுங் கட்சி யான தி.மு..வும்., எதிர்க் கட்சியான .தி.மு..வும் தயாராகி வருகின்றன.

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்கான வியூகங்கள் குறித்து சென்னை அண்ணா அறிவால யத்தில் தி.மு.. தலைவரும், முதல் அமைச்சருமான மு..ஸ்டாலின் தலை மையில் நேற்று (8.8.2021)  ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.. பொதுச்செயலாளர் துரைமு ருகன், பொருளாளர் டி.ஆர். பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, எஸ்.ஜெகத்ரட்சன் எம்.பி., உள்ளாட்சி தேர் தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களை சேர்ந்த அமைச்சர்கள், தி.மு.. மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

முதலமைச்சர் அறிவுரை

கூட்டத்தில் முதலமைச்சர் மு..ஸ்டா லின் பேசியதாக வெளியாகி உள்ள தகவல் வருமாறு: நம்முடைய ஆட்சியின் செயல்பாடுகள் மக்கள் மத்தி யில் நல்ல வரவேற்பை பெற் றுள்ளது. எனவே உள்ளாட்சி தேர் தலில் அனைத்து இடங்களிலும் நம் முடைய கூட்டணி தான் வெற்றி பெற போகிறது. இந்த வெற்றி மாபெரும் வெற்றியாக இருக்க வேண்டும். வர லாற்றுவெற்றியாக இருக்க வேண்டும். அதற்காகதி.மு.. மாவட்ட செய லாளர்கள் தீவிரமாகதேர்தல் களப்பணி யில் ஈடுபட வேண்டும்.

ஒவ்வொருவீட்டுக்கும் நேர டியாக சென்று மக்களை சந் தித்து, தி.மு.. ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்கள், செயல்ப டுத்த இருக்கிற திட்டங்களை எடுத்துக்கூறி ஆதரவு திரட்ட வேண்டும். .தி.மு.. கூட் டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறக் கூடாது. எனவே நாம் 100 சதவீத வெற்றிபெற வேண்டும் என்ற இலக் குடன் தேர்தல் பணி யில் கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசியதாக கூறப்படுகிறது. பொறுப் பாளர்கள் நியமிக்க முடிவு

இந்த கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட் டங்களில் தேர்தல் பணிகளை ஒருங்கி ணைந்து கவனிப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு அமைச்சர் தலைமையில் சட்டமன்ற, நாடாளு மன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய பொறுப்பாளர் களை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரி கிறது.

காலை 10.40 மணிக்கு தொடங்கிய கூட்டம் 11.30 மணி வரை நடைபெற்றது

No comments:

Post a Comment