புதுடில்லி, ஆக. 1- வீட்டின் கூரைகளில் சூரிய சக்தி மின்சார வசதி ஏற்படுத் துவதற்கு வழங்கப்படும் மானியம் குறித்து நாடா ளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் அறிவித்து உள்ளார்.
ஊரகப் பகுதிகள் உள் ளிட்ட நாட்டின் பல்வேறு இடங்களில் கூரைகள் மீது சூரிய சக்தியை நிறு வும் நடவடிக்கையை ஊக்குவிப்பதற்காக, கூரைகள் மீது நிறுவப் படும் சூரிய சக்தித் திட் டத்தை ஒன்றிய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் அமல்படுத்துகிறது.
இதற்காக, 2022ஆம் ஆண்டிற்குள் 4000 மெகா வாட் திறன் கொண்ட கூரைகள் மீதான சூரிய சக்தி மின்வசதியை குடி யிருப்பு துறையில் மானி யத்துடன் அமைக்க இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை, ஒன்றிய எரிசக்தி மற்றும் புதிய மற்றும் புதுப்பிக் கத்தக்க எரிசக்தி அமைச் சர் ஆர் கே சிங், நாடா ளுமன்றத்தின் மாநிலங் களவையில் எழுத்துப் பூர்வமாக அளித்த பதி லில் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
தனி வீடுகளின் கூரை களில் 3 கிலோ வாட் வரை சூரிய சக்தியை நிறு வுவதற்கு 40 விழுக்காடு வரை மானியம் வழங்கப் படும். 3 முதல் 10 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய சக்தி கருவிகளை நிறுவுவதற்கு 20 விழுக்காடு மானி யம் அளிக்கப்படும்.
குடியிருப்பு நல்வாழ்வு சங்கங்கள்/ குழு வீடுக ளின் சங்கங்களுக்கு பொது வான மின்சார வசதிக ளுக்கு பயன்படுத்துவதற் காக நிறுவப்படும் 500 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய சக்தி உபகரணங்களுக்கு 20 விழுக்காடு மானியம் வழங்கப்படும்.
தொகுப்பில் இணைக் கப்பட்ட கூரைகள் மீதான சூரிய சக்தி அமைப்புமுறை களின் ஒட்டுமொத்த ஊக்குவிப்பிற்காக இந்த நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment