05.06.1948 -குடிஅரசிலிருந்து..
கடவுளுக்கே இந்தக் கதியானால் அவர்கள் தம் கதி என்னவாகும் என்று அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்களா? அப்புறம் ஒரு நாள் வெளியே போவார்களா? உங்கள் புருஷர்கள்; வேறு மங்கையர்களைத் தேடி. அந்தச் சாமியை அடித்து வைத்தவன் நம்மவன். அந்தச் சாமிக்கு உயிர் பிச்சை கொடுக்க கும்பாபிஷேகம் நடத்த உதவியது நம்முடைய பொருள்.
அந்த சாமிக்கு அரிசி, பருப்பு அழுது வருவது நாம். அப்படியிருக்க நாம் அதைத் தொடக் கூடாதென்று அந்த பார்ப்பான் கூறுகிறானென்றால் அப்படிப்பட்ட இடத்திற்கு நாம் போகலாமா? அதற்குத் தேங்காய் பழம் படைக்கிறீர்களே, துணிமணி வாங்கித் தருகிறீர்களே? அதை அந்த குழவிக் கல்லா அனுபவிக்கிறது? குழவிக் கல்லால் சாப்பிட முடியுமா? சாப்பிட்டால் ஜீரணமாகி வெளிக்குப் போகிறதா? எல்லாவற்றையும் பார்ப்பான்தானே அனுபவிக்கிறான்? பாடுபட்ட பணத்தை அப்படி விரயமாக்கலாமா நீங்கள்? கடவுள் என்றால் அது யோக்கியமாக, ஒழுக்கமாக பாரபட்சமின்றி நடந்து கொள்ள வேண்டாமா?
பாடுபடும் நீங்கள் பட்டினி கிடக்க, படிக்க வசதியின்றித் தற்குறிகளாயிருக்க, ஏழைகளாக, கீழ் ஜாதி மக்களாக இருக்க, பாடுபடாத பார்ப்பனத்திகள் சோம்பேறிகளாக, அய்.சி.எ. காரர்களின் மனைவிகளாக, பட்டாடை உடுத்தி மேனி மினுக்குடன் உயர் ஜாதி மக்களாக வாழ அனுமதிக்கும் கடவுளா உங்களுக்குக் கடவுள்?
No comments:
Post a Comment