எத்தியோப்பியாவில் கடும் உணவுப் பஞ்சம்: குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 2, 2021

எத்தியோப்பியாவில் கடும் உணவுப் பஞ்சம்: குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு?

அடிஸ்அபாபா, ஆக. 2- எத்தியோப்பியா வின் டைக்ரே மாகாணத்தில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் அடுத்த ஒரு வருடத் துக்குள் உயிருக்கு ஆபத்தான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படலாம் என்று அய்க்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அய்.நா. வெளியிட்ட அறிவிப்பில், “ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் உள்ள வடகிழக்கு மாகாணமான டைக்ரேவில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் அடுத்த 12 மாதங்களில் உயிருக்கு ஆபத் தான ஊட்டச்சத்துக் குறைபாட் டால் பாதிக்கப்படலாம்.

இப்பகுதியில் குழந்தைகளின் உடல் நலம் எங்களுக்கு அச்சத்தைத் தருகிறது. டைக்ரேவில் உள்ள கர்ப்பிணி மற்றும் பால் கொடுக்கும் தாய்மார்களுக்குப் பரிசோதனை செய்ததில் இருவரில் ஒருவர் ஊட் டச்சத்துக் குறைபாட்டால் பாதிக் கப்படுகின்றனர்.

டைக்ரேவில் சுமார் 4 லட்சம் மக்கள் பஞ்சத்தில் வாழ்கின்றனர். மேலும் 90 சதவீதத்திற்கும் அதிக மான மக்கள் அவசர உணவுத் தேவையில் உள்ளனர்என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 6 மாதங்களுக்கு மேலாக டைக்ரே பகுதியில் உள்ள இனக்குழுக்களிடம் மோதல் நிலவு கிறது.

முன்னதாக, 2019ஆம் ஆண்டுக் கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபய் அகமது அலிக்கு வழங்கப்பட்டது.

அண்டை நாடான ஏரிட்ரேயா வுடன் 20 ஆண்டுகாலமாக எத்தி யோப்பியாவுக்கு நிலவிவந்த ராணுவ ரீதியிலான சிக்கலைக் கடந்த ஆண்டு சமாதான ஒப்பந்தத்தின் மூலம் இவர் முடிவுக்குக் கொண்டு வந்தார். இதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் சொந்த நாட் டில் நிலவும் இனக்குழு பிரச்சினை களை அபய் அகமதுவால் முடிவுக் குக் கொண்டுவர முடியவில்லையா? என மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

No comments:

Post a Comment