கலைஞர் பெயரில் மொழியியல் பல்கலைக்கழகம் தொடங்குக! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 9, 2021

கலைஞர் பெயரில் மொழியியல் பல்கலைக்கழகம் தொடங்குக!

 மக்களவை உறுப்பினர் தொல். திருமாவளவன்

சென்னை, ஆக.9 கலைஞர் பெயரில் மொழியியல் பல்கலைக்கழகம் ஒன் றைத் தொடங்க வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினரு மான தொல். திருமாவளவன் வலியுறுத் தியுள்ளார்.

இது தொடர்பாக, திருமாவளவன்  7.8.2021 அன்று வெளியிட்ட அறிக்கை:

தன் வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழியின் பாதுகாப்புக்காகவும் மேன்மைக்காகவும் அரும்பெரும் தொண் டாற்றிய கலைஞரின் நினைவைப் போற்றும் வகையில் அவரது பெயரில் தமிழ்நாட்டில் மொழியியல் பல் கலைக்கழகம் ஒன்றைத் தொடங்க வேண்டும் என்று, விடுதலைச் சிறுத் தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்நாட்டில் எத்தனையோ பல துறைகளுக்கெனத் தனித்தனியே பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டு அவையாவும் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. ஆனால், மொழியிய லுக்கென தனியே பல்கலைக்கழகம் ஏதும் இல்லை.

உலகின் பல்வேறு மொழிகளைக் கற்பிக்கவும், இந்திய மொழிகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத் தவும், மொழிபெயர்ப்புகளை ஊக்கு விக்கவும், உலகின் பல்வேறு நாடு களிலுமிருந்து ஆராய்ச்சிக் கல்வி பயிலுவோர் இந்தியாவுக்கு வந்து மொழியியல் ஆராய்ச்சிகளை மேற் கொள்ளவும் ஏதுவான வகையில் தமிழ்நாட்டில் பொருத்தமானதொரு இடத்தில், கலைஞர் பெயரில் அந்தப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும்.

ரஷ்ய நாட்டின் தலைநகரான மாஸ்கோவில் அமைந்திருக்கும் மாஸ்கோ அரசு மொழியியல் பல் கலைக்கழகத்தை  முன்மாதிரியாகக் கொண்டு அந்தப் பல்கலைக்கழகத்தை உருவாக்கலாம்.

கலைஞரின் மூன்றாவது நினைவு நாளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முன்வைக்கப்படும் இந்தக் கோரிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் பரிசீலிக்க வேண்டு மெனக் கேட்டுக்கொள்கிறோம்“.

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment