தேசிய கீதமே இல்லாத நாடு - ஈராக் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 14, 2021

தேசிய கீதமே இல்லாத நாடு - ஈராக்

கடந்த 2003ஆம் ஆண்டு வரை ஈராக்கின் சர்வாதிகாரியாக சதாம் உசேன் விளங்கினார். அவரது ஆட்சி முடிவுக்கு வந்தவுடன் அவரதுஆட்சியிலிருந்த தேசிய கீதத்தை மாற்ற முடிவு செய்தனர், ஆனால் விரைவாக அவர்களால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

இந்நிலையில் 2004ஆம் ஆண்டு மேதினி என்ற பாடலை தேசிய கீதமாக அந்நாடு அறிவித்தது. இருந்தாலும் அதில் பல சர்ச்சைகள் எழுந்த நிலையில் கடந்த 2020 மே மாதம் மேதினி இசையை தங்கள் தேசிய கீதமாக அறிவித்ததை அந்நாட்டு அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. தற்போது அந்நாட்டிற்கு அதிகாரப்பூர்வமான தேசிய கீதம் எதுவும் இல்லை.

அதிபரே உருவாக்கிய தேசிய கீதம் - ரஷ்யா

ரஷ்யா, சோவியத் யூனியனாக இருந்த போது அந்நாட்டின் தேசிய கீதம் ஜோசப் ஸ்டாலினை போற்றுவதாகவே இருந்தது. பின்னர் சோவியத் யூனியன் முடிவுக்கு வந்து ரஷ்யா தனி நாடாக மாறிய போது அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் கடந்த 2000மாவது ஆண்டு புதிய தேசிய கீதத்தை உருவாக்கினார்

No comments:

Post a Comment