சென்னை, ஆக.1 மாணவி களுக்கு குழந்தைத் திருமணம், பாலியல் விழிப்புணர்வு ஏற் படுத்த ஆசிரியைகளை பொறுப் பாளராக நியமிக்க உத்தர விடப் பட்டுள்ளது.
ஆசிரியர்களைப் பொறுப் பாளராக நியமிக்கக் கூடாது எனவும் கல்வித்துறை உத்தர விட்டுள்ளது.
பள்ளிகளில் பயிலும் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவிகளுக்கு குழந்தை திரு மணம் மற்றும் பாலியல் விழிப் புணர்வு குறித்த விவரங்களைத் தெளிவுபடுத்த வேண்டும் என கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வட் டாரக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கை:
பள்ளிகளில் ஒவ்வொரு 10 மாணவிகளுக்கும், ஒரு ஆசி ரியை நியமிக்கப்பட்டு, விழிப்பு ணர்வைக் கொடுக்க வேண்டும்.
அனைத்துப் பள்ளிகளிலும் 8 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்குக் குழந்தைத் திருமணம் மற்றும் பாலியல் விவகாரங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு 10 மாணவிகளுக்கும் பொறுப்பாள ராக ஒரு ஆசிரியை வீதம் நியமனம் செய்து மின்னஞ்சலுக்கு அனுப்புமாறும் தலைமை ஆசிரியரின் கையொப் பமிட்ட பிரதியை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்ப டைக்குமாறும் தலைமை ஆசிரி யர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
1. ஒருவர் கூட விடுபடாமல் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியைகளையும் பொறுப்பாளராக நியமனம் செய்ய வேண்டும்.
2. ஒவ்வொரு 10 மாணவி களுக்கு ஒரு ஆசிரியை வீதம் பொறுப்பாளராக நியமனம் செய்யும்போது, மாணவிகள் பயிலும் வகுப்பு பொறுப்பு ஆசிரியை கற்பிக்கும் வகுப்பு எனவும் மேல்நிலை வகுப்பு , உயர்நிலை வகுப்பு, நடுநிலை வகுப்பு, தொடக்கநிலை வகுப்பு எனவும் பேதம் பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை.
3. ஒவ்வொரு 10 மாணவி களுக்கு ஒரு ஆசிரியை வீதம் பொறுப்பாளராக நிய மனம் செய்ய வேண்டி இருப் பினும் மாணவிகளின் எண் ணிக்கை ஆசிரியைகளின் எண் ணிக்கை ஆகியவற்றைக் கணக் கிட்டுச் சமமாகப் பிரித்தல் வேண்டும்.
4.மாணவிகளுக்கு ஆண் ஆசிரியர்களைப் பொறுப்பாள ராக நியமனம் செய்யக்
கூடாது.
இவ்வாறு அந்த சுற்றறிக் கையில் தெரிவிக்கப்பட்
டுள்ளது
No comments:
Post a Comment