செவ்வாய்க் கோளில் பாறைத் துகள்களை சேகரிக்கும் நாசா ரோவரின் முயற்சி தோல்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 9, 2021

செவ்வாய்க் கோளில் பாறைத் துகள்களை சேகரிக்கும் நாசா ரோவரின் முயற்சி தோல்வி

நாசா, ஆக. 9- கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கோளில் வெற்றிகரமாக தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர், செவ்வாய் கோளை படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது. செவ்வாய் கோளில் உயிரினங்கள் வாழ்ந்த னவா என்பதை ஆராய் வதற்காக அங்கிருந்து பாறை மற்றும் மண் துகள்களை சேகரிக்கும் பணியில் பெர்சவரன்ஸ் ரோவர் ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில் பாறை துகள்களை சேகரிக்கும் பெர்சவரன்ஸ் ரோவரின் முதல் முயற்சி தோல்வி யில் முடிந்ததாக நாசா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறப்பட்டுள்ள தாவது:-

பெர்சவரன்ஸ் ரோவ ரில் பொருத்தப்பட்டுள்ள 7 அடி நீளமுள்ள ரோபோ கையில் தரையில் துளை யிடுவதற்கான கருவி மற்றும் மாதிரிகளை எடுப்பதற்கான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் எடுக்கப்பட்ட மாதிரிகளை சேமித்து வைக்க 43 டைட்டானியம் குழாய்களும் உள்ளன. அதன்படி பெர்சவரன்ஸ் ரோவர் மாதிரிகளை சேகரிக்கும் தனது முதல் முயற்சியில் தரையில் வெற்றிகரமாக துளை யிட்டது. ஆனால் அதிலி ருந்து பாறைகளை எடுத்து குழாயில் அடைத்து மூடுவதற்கான முயற்சி தோல்வியில் முடிந்தது. பெர்சவரன்ஸ் ரோவரின் நிலைமையை மதிப்பீடு செய்வதற்கும் இந்த பிரச் சினையை தீர்ப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன.

இவ்வாறு நாசாவின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment