காபூல், ஆக. 11- கடந்த இரு நாட்களில் முக்கிய நகரங் களை தலிபான்கள் கைப் பற்றியுள்ளதாக ஆப்கா னிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி வரு வதால், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும் அந் நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆப்கன் ஊடகங்கள் வெளியிட் டுள்ள செய்தியில், 'ஜோஸ்ஜன் மாகாணத்தின் முக்கிய நகரான செபர்கானையும், தென்கிழக்குப் பகுதியின் முக்கிய நகரத்தையும் தலிபான்கள் கடந்த இரு நாட்களில் கைப்பற்றியுள் ளனர். செபர்கான் நக ரமே தலிபான்கள் தாக் குதலால் நிலைகுலைந்து உள்ளது. எனினும் ராணு வத் தலைமையிடம் மற் றும் விமான நிலையத்தை ஆப்கானிஸ்தான் பாது காப்புப் படையினர் தங் களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலிபான்கள் கைப் பற்றிய செபர்கான் பகு தியை மீட்பதற்கு ஆப்கன் ராணுவம் தாக்குதலைத் தொடங்கி உள்ளது. இதில், 200க்கும் மேற்பட்ட தலிபான்கள் கொல்லப் பட்டதாகக் கூறப்படுகி றது. அதேபோல், அமெ ரிக்க விமானப் படை, தலிபான்களின் நிலைகள் மீது பி52 ரக வெடிகுண்டு களை வீசியும், ஏசி10 ரகத் துப்பாக்கிகள் மூலமும் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளனர். தலை நகர் காபூலுக்குள் தலிபான் கள் நுழைய முடியாத படி அமெரிக்க ராணுவத்தின் எப்16 ரகப் போர் விமா னங்கள் கண் காணிப்பில் உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment