வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்திவரும் தங்களது பொற்கால ஆட்சியில் அன்றாடம் அடுக்கடுக்கான சாதனைகள் மேல் சாதனைகள் அணிவகுத்து வருகின்றன. மகிழ்ச்சி - வாழ்த்துகள் - நன்றிகள்!
தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் சிலை களுக்குக் கூண்டுகள் அமைத்து அவர்களை சிறைப்படுத்தியிருப்பது எவ்வகையிலும் அவர்களுக்கோ, சட்டம் ஒழுங்கை காக்கும் ஓர் அரசுக்கோ பெருமையாகாது.
அதிலும், அண்மைக்காலம் வரை திறந்த சிலைகளாக இருந்த தந்தை பெரியார் சிலைகளுக்கும்கூட சென்ற ஆட்சியில் சில விஷமிகளால் - காவிகளால் சில்லுண்டித் தனங்கள் நடைபெறுவதைத் தடுக்க சரியான வழி என்று கூண்டு போட்டனர்.
எப்போதோ எங்கோ நடந்த அசம் பாவிதங்களுக்காக - இது சரியான மாற்று அல்ல. மாறாக கண்காணிக்கும் கேமராக்களைப் (CCTV-closed-circuit television) பொருத்த லாம் - குற்றங்களும் குறையும் வாய்ப்பு ஏற்படும்.
எனவே, தலைவர்கள் அனைவருக்கும் 75 ஆம் ஆண்டு விடுதலை நாளில், கூண்டுகள் அகற்றி, சுதந்திரமாகக் காட்சியளிக்க நீங்கள் ஏற்பாடு செய்யுங்கள் என்று மிகுந்த கனிவுடன் தங்களை கேட்டுக்கொள்கிறோம்.
நாடெங்கும் உள்ள பெரியார் தொண் டர்களின் வேதனைப்பட்ட நெஞ்சங்கள் விடுபடவே இந்த விடியலையும் தேடிக் கொடுங்கள்!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
7.8.2021
No comments:
Post a Comment