சென்னை, ஆக. 31 ஒன்றிய அரசு கல்வி நிறுவ னங்களான அய்அய்டி, அய்அய்எம், அய்அய் அய்டி, என்அய்டி மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பயிலும் தமிழ் நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப் பட்டோர், சீர் மரபினர் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக் கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள ஒன்றிய அரசு கல்வி நிறுவனங் களான அய்அய்டி, அய்அய்எம், அய்அய்அய்டி என்அய்டி மற்றும் ஒன்றிய பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகள் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ,மாண வியருக்கு கல்வி உதவித் தொகையாக மாணவர் ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் 12 லட்சம் வரை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப் பட்டுள்ளது.
இந்த கல்வி உதவித் தொகைக்கு 2021-_2022ஆம் கல்வி யாண்டில் புதியது விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் இயக்குநர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம், இணைப்பு கட்டடம், 2ஆவது தளம், சேப் பாக்கம், சென்னை - 08 அல்லது சென்னை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்திலுள்ள சென்னை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலகத்தை அணுகியோ அல்லது மின்னஞ்ல் முகவரி tngovtiistscholarship@gmail.com முகவரிக்கு விண்ணப்பம் அனுப்பக்கோரி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பங்களை https.//www.chennai.nic.in என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ள லாம். மேலும், மேற்படி 2021_2022ஆம் நிதியாண்டிற்கான கல்வி உதவித்தொகை விண்ணப் பத்தினைமாணவர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான் றொப்பத்துடன் தகுதியான விண் ணப்பத்தினை பரிந்துரை செய்து நவம்பர் 30ஆம் தேதிக்குள் இயக் குநர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம், இணைப்பு கட்டடம், 2ஆவது தளம், சேப் பாக்கம், சென்னை-05 என்ற முகவ ரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment